உலகம்

பெரும்போகத்தில் சோள அறுவடையை கொள்வனவு செய்வதற்கு கிரிஸ்புரோ நிறுவனத்தினால் இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கீடு

 

இலங்கையின் உணவுப் பாதுகாப்பை மையமாகக் கொண்ட இலங்கையின் முன்னணி கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ, வரவிருக்கும் பெரும்போகதில் சோளத்தை கொள்வனவு செய்ய 2 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. கிரிஸ்புரோவின் கூட்டு நிறுவனமான குருணாகல் விலங்கு உற்பத்தி நிறுவனத்திற்கு தேவையான சோளத்தை பல மாவட்டங்களில் பரவியிருக்கும் சுமார் 2000 சோள செய்கையாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படவுள்ளன.

சோள விவசாயிகளுடன் கையெழுத்திட்ட கொள்முதல் ஒப்பந்தங்களின்படி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் நாட்டின் மொத்த சோள அறுவடையின் பெரும்பகுதியை கிரிஸ்புரோ கொள்முதல் செய்துள்ளது.

விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கப்பட்ட அறுவடை நிறுவனத்தின் அதிநவீன கிடங்கு வசதிகளில் களஞ்சியப்படுத்தப்படுகிறது மற்றும் முழு செயல்முறையும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது, இதனால் கிரிஸ்புரோ நிறுவனம் விவசாய சமூகத்தின் மக்காச்சோள அறுவடையை எந்த இடையூறும் அல்லது தாமதமும் இல்லாமல் வாங்க உதவுகிறது.

கிரிஸ்புரோ குழுமத்தின் ஒரு பகுதியான ஃபோச்சூன் அக்ரோவின் கூட்டு முயற்சியாக செயல்பட்டு வரும் இந்த களஞ்சிய வளாகம் மொனராகலை மாவட்டத்தில் சியம்பலான்டுவ பகுதியில் அமைந்துள்ளது மற்றும் நாட்டில் நிறுவப்பட்ட மிகப்பெரிய சோளக் களஞ்சியமாhக மாறியுள்ளது.

பல மாவட்டங்களில் விவசாயிகள் கொண்டு வரும் சோளத்தை வாங்குவது முதல் சேமிப்பது வரை, நவீன தொழில்நுட்பத்துடன் இந்த செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது, இதனால் விவசாயிகள் தங்கள் பணத்தை விரைவாக பெற்றுக் கொள்ள முடிந்தது.

கிரிஸ்புரோ குழுமம் களஞ்சிய வளாகத்தை புதுப்பிக்க 500 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது, இங்கு கட்டப்பட்ட நான்கு களஞ்சியசாலைகளில் சுமார் 16,000 மெட்ரிக் தொன் சோளம் களஞ்சியப்படுத்த முடியும்.

அதே நேரத்தில், விவசாயிகளிடமிருந்து வாங்கிய சோளத்தை ஈரமான மற்றும் உலர்ந்த தானியங்களாக சேமிக்கக் கூடிய வசதிகளும் இதில் உள்ளன. கோழி இறைச்சித் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில், கிரிஸ்புரோ மட்டுமே இவ்வளவு பெரிய மற்றும் அதிக திறன் கொண்ட சேமிப்புக் களஞ்சியத்தைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் சோளம் முதலில் ஈரமான எடையும், பின்னர் தர சோதனை பதிவேட்டில் பதியப்படுகிறது. ஈரமான சோளப் பயிர் பின்னர் இயந்திரத்தினால் உலர்த்தப்பட்டு, விவசாயிகள் தனது அறுவடையின் உலர்ந்த எடைக்கு பணம் செலுத்தப்படுகிறது. அறுவடை நாளில் அனைத்து கொடுப்பனவுகளும் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும். வாங்கிய அறுவடைகளை சேமிக்க தலா 4000 மெட்ரிக் தொன் வீதம் நான்கு களஞ்சியங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

‘இந்த சேமிப்பு வசதிகள் செயல்படுமுன், விவசாயிகள் தங்கள் விளைச்சல்களை இடைத்தரகர்கள் மூலம் விற்க வேண்டியிருந்தது, மேலும் சில வாரங்கள் தங்கள் விளைச்கல்களை மிகக் குறைந்த விலையில் விற்று அறுவடைக்கு பணம் பெற வேண்டியிருந்தது. இருப்பினும், அவர்கள் ஒரே நாளில் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து சோளம் அறுவடைக்கு கொழும்பில் நிலவும் மொத்த விலையை பெற முடியும் என்பதை கிரிஸ்புரோ குழுமம் விவசாய சமூகத்தை மேம்படுத்துவதற்காக எடுத்த ஒரு முக்கியமான படியாகும்.

இது எங்கள் உற்பத்தி செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான ஒரு படியாகும், அத்துடன் கிராமப்புற விவசாய சமூகத்தின் கடனை நீக்குவதன் மூலம் உள்ளூர் விவசாயத்தை புதுப்பிக்க கிஸ்புரோ செய்த பெரும் பங்களிப்பாகும்.’ என கிரிஸ்புரோவின் சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் அமோரேஸ் செல்லார் கூறினார்.

1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.

Hot Topics

Related Articles