உலகம்

இலங்கையின் மிகச் சிறந்த 50 இலச்சினைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ள HNB Finance

நிதிச் சேவைகள் துறையில் தமது பலமான முன்னேற்றத்தை மீண்டும் கவனத்தில் கொண்டு இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC நாட்டின் முன் வரிசையிலுள்ள சிறந்த இலச்சினைகள் அடங்கிய பட்டியடிலில் இடம்பிடித்து LMD சஞ்சிகை மற்றும் Brand Finance நிறுவனம் ஆகியவற்றினால் வருடாந்தம் அறிவிக்கப்படும் இலங்கையின் 50 சிறந்த வாடிக்கையாளர் இலச்சினைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

நிறுவனம் நாட்டிலுள்ள வாடிக்கையாளர் இலச்சினைகளை மதிப்பீடு செய்கையில் மற்றும் மூலோபாய பிரவேசத்தை பெற்றுக் கொடுக்கும் முன்னணி வரிசையிலுள்ள ஒரு நிறுவனமாகும்.

வருடாந்தம் அறிவிக்கப்படும் இந்த பட்டியலுக்காக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 50 வாடிக்கையாளர் இலச்சினைகளை தேர்ந்தெடுப்பதற்காக சுயாதீனமான தணிக்கை மற்றும் இந்த இலச்சினைகளுக்கு உரிய வாடிக்கையாளர் நடத்தை, நிதி செயல்திறன் மற்றும் பெற்றுக் கொள்ளக்கூடிய அனைத்து நிதித் தகவல்கள் குறித்தும் மேற்கொள்ளப்படும் மிகவும் விஸ்தீரமான சந்தையின் ஆய்வின் மூலம் தெரிவு செய்யப்பட்ட இலச்சினைகளுக்கு குறித்த கௌரவம் Brand Finance இனால் வழங்கப்பட்டது.

இதன்போது பிரதான அளவுகோல்களான ஒவ்வொரு இலச்சினைக்கும் உரிய அவர்களது நிதிப் பலம், வர்த்தகம் மற்றும் எதிர்கால பொருளாதார கண்ணோட்டம் ஆகியவற்றின் கீழ் கௌரவிப்புக்கள் செய்யப்பட்டன.

அண்மையில் அறிவிக்கப்பட்ட LMD Brand Finance சிறந்த வாடிக்கையாளர் இலச்சினைகள் 50க்குள் இடம்பிடித்து நிதிச் சேவைகள் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் HNB Finance PLC முதல் தடவையாக இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது. HNB Finance இலச்சினையின் பெறுமதியானது 1819 மில்லியன் ரூபாவென மதிப்பீடு செய்யப்பட்டதுடன் நிறுவனத்தின் தற்போதைய AA- கடன் தரத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘ LMD Brand Finance சிறந்த வாடிக்கையாளர் இலச்சினைகள் 50க்குள் முதல் தடவையாக இணையக் கிடைத்தமை HNB Finance பெற்றுக் கொண்ட விசேட வெற்றியாக இதனைக் கருத முடிவதுடன் மிகவும் சவால்கள் நிறைந்த இந்த காலக்கட்டத்தில் இவ்வாறானதொரு வெற்றியை அடையக் கிடைத்தமை இதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது என்பதே எனது கருத்தாகும்.

கொவிட் தொற்றுநோயினால் எமது நாடு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகம் முழுவதும் பாதிப்படைந்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நிதி நிறுவனமாக HNB Finance தமது பொறுப்பை சிறந்த விதத்தில் நிறைவேற்றி தமது வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்ட நாட்டிலுள்ள பொருளாதார மேம்பாட்டிற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்குதல் மற்றும் அதனை பலப்படுத்துவதற்கு பாரிய அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என இந்த கௌரவிப்பு மூலம் தெளிவாக புலப்படுகின்றது.

HNB Finance இன் ஒட்டுமொத்த ஊழியர்கள் எமது இலச்சினையை பலமாகவும் மற்றும் உறுதியாகவும் கொண்டு நடத்திச் செல்வதற்காக கொவிட் தொற்றுநோய்க்கு நாடு எதிர்கொள்ள ஆரம்பித்த நேரத்திலிருந்து இபபோது வரை சவால் நிறைந்த சந்தைச் சூழலிலும் கூட பாரிய அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது நிதிச் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய உச்ச அளவு சேவை திட்டமும் HNB Finance இலச்சினையை பலப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்தமையும் இந்த வெற்றிக்கான பிரதான கருவியாக அமைந்தது என்பதே எனது கருத்தாகும்.’ என அதன் முகாமைத்துவப் பணிப்பாளரும் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் தெரிவித்துள்ளார்.

HNB Finance இன் பெரும்பாலான பங்குகளுக்குச் சொந்தக்காரர்களான HNB இனால் நிறுவனத்தின் சேவைக் கட்டமைப்பு, நடவடிக்கை செயற்பாடுகள், நிறுவனத்தின் சிறந்த நிர்வகிப்பு மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகிய துறைகள் குறித்து பெற்றுக் கொடுக்கப்படும் ஒத்துழைப்புக்கள் காரணமாக இந்த பிரிவுகளின் நடவடிக்கைகளால் சிறந்த வங்கிச் சேவைத் துறை மற்றும் சமநிலையான மட்டத்தில் காணப்படுகின்றது.

அண்மையில் நிறுவனத்திலுள்ள சேவைக் கட்;டமைப்பு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகரிப்பதற்காக விஸ்தீரமான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் அதன் காரணமாக கொவிட் வைரஸின் தாக்கத்தினால் நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலும் கூட சிறந்த மட்டத்தில் தமது சேவையை நடத்திச் செல்வதற்கு, HNB Finance நிறுவனத்தினால் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல்மயத்தினால் ஒட்டுமொத்த சேவை வலைப்பின்னலை பலப்படுத்துவதற்கு நிறுவனத்தினால் முடிந்துள்ளதால் ஊழியர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்த முடிந்ததுடன், நுன்நிதி ஆலோசனை நடவடிக்கைகள் மற்றும் நிதி அறிவு வேலைத்திடங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் போன்ற நிறுவனத்தின் தற்போதைய சேவைகள் குறித்தும் மேலதிக பெறுமதியை சேர்ப்பதற்கு HNB Finance நிறுவனத்தினால் முடிந்துள்ளது.

இந்த அனைத்து முயற்சிகளின் விளைவாக நிதி நிறுவனத் துறையில் தனித்துவமான ஒரு இடத்தில் நிலைத்து நிற்பதற்கு HNB Finance நிறுவனத்திற்கு முடிந்துள்ளதுடன் நிறுவனத்துடன் இணைந்துள்ள அனைத்து பிரிவினர்களுக்கும் அதன் நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் HNB Finance இனால் முடிந்துள்ளது.

 

Hot Topics

Related Articles