உலகம்

130 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு!

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே 130 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்றரை வயது சிறுவன், எட்டு மணி நேர போராட்டத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஆக்ரா அருகேயுள்ள தரியாய் கிராமத்தில் சோட்டேலால் என்பவர் மகன் நேற்று காலை, வீட்டு வாசலில் விளையாடிகொண்டிருந்தபோது, அருகில் இருந்த 130 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவம், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் சிறுவனை  மீட்புப் பணியை முன்னெடுத்திருந்தன்.

எட்டு மணி நேர போராட்டத்துக்குப் பின், மாலையில் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டார்.

சிறுவனின் தந்தை சோட்டேலால் கூறுகையில், ”நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி.

என் குழந்தையை மீண்டும் உயிருடன் பார்த்து விட்டேன். குழந்தையை மீட்டுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.

Hot Topics

Related Articles