இலங்கை மீனவர்களிடையே இந்திய டெல்டா கொவிட் வைரஸ் வகை பரவும் அபாயம்!

(file photo)

இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பரவிவரும் மிகவும் ஆபத்தான டெல்டா கொவிட் திரிபு இலங்கை மீனவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்களை தொடர்புகொள்ளாதிருப்பதன் மூலம் இந்த வைரஸ் திரிபு நாட்டுக்குள் நுழைவதை தடுத்துக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனை நாட்டுக்குள் பரவவிடாமல் தடுக்கும் நடவடிக்கையாக விமான நிலையம், துறைமுகம் போன்ற இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும் என்றும், வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இன்னமும் கொவிட் அச்சம் நீங்கவில்லை என்றும், பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதிகளில் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சியை இனிவரும் காலங்களில் கண்டுகொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் காலப்பகுதிகளில், நடமாட முடியாத வயோதிபர்கள் மற்றும் நோயாளர்களை கதிரைகளில் வைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கு தூக்கிச் செல்வதை போன்று, தடுப்பூசி பெற்றுக் கொள்வதற்கும் அக்கறை காட்டுமாறு பொதுமக்களிடம் அவர் மேலும் கோரியுள்ளார்.

 

 

Hot Topics

Related Articles