உலகம்

இலங்கையில் 21ம் திகதிக்கு பின்னரும் பயணத்தடை தொடரலாம்!

தற்போது அமுலில் இருக்கும் நாடளாவிய ரீதியிலான பயணத்தடையை 21ம் திகதியுடன் நீக்குவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் இல்லையென அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இன்று இடம் பெற்ற ஊடகவியளால் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், பயணத்தடையை நீக்குவது தொடர்பில் இப்போது கூறமுடியாது எனவும் விளக்கமளித்துள்ளார்.

இதனிடையே இலங்கையில் நேற்று, கொவிட் தொற்றால் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,260 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 25 பெண்களும் 32 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

நாளாந்த கொவிட் மரணங்களை நேற்று  (14) முதல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள்  அறிவிப்பதற்கான புதிய பொறிமுறை ஒன்று கையாளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன நேற்று அறிவித்திருந்தார்.

இத

Hot Topics

Related Articles