உலகம்

UEFA EURO 2020™ போட்டித் தொடருக்காக பிரசாரத்தை முன்னெடுக்கும் Vivo

UEFA EURO 2020™ போட்டித்தொடரின் உத்தியோகபூர்வ ஸ்மார்ட்போனான vivo, எல்லா இடங்களிலும் உள்ள உதைப்பந்தாட்ட ரசிகர்கள் இதன் ஒவ்வொரு அழகான தருணத்தையும் அனுபவித்து மகிழ அழைப்பு விடுகின்றது.

அதன் பாவனையாளர்களுக்கு நம்பமுடியாத அனுபவங்களை வழங்கும் ஆர்வத்துடன், இந்த வர்த்தகநாமமானது அதன் அனுசரணை தளத்தை போட்டியை சூழவுள்ள மகிழ்ச்சியை மேம்படுத்த பயன்படுத்துகின்றது.

இன்று அறிமுகப்படுத்தப்படும் அதன் “To Beautiful Moments” பிரசாரத்தில் vivo மக்களை இந்த தருணங்களை ரசித்து மகிழ ஊக்குவிக்கிறது. அதாவது போனை கீழே வைத்தாவது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ரசிகர்களுடன் மெய்நிகராக இணைந்திருப்பதனையும் அல்லது இந்த அழகான விளையாட்டில் முழு கவனத்தையும் செலுத்துவதனையும் குறிக்கின்றது.

“உலகெங்கிலும் உள்ள மக்கள் மிகவும் உற்சாகமாக, இந்த போட்டித் தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். முன்னெப்போதையும் விட இப்போது விளையாட்டின் உணர்வு மற்றும் திறனைக் கொண்டாட நாங்கள் விரும்புகிறோம், மேலும் ரசிகர்கள் சிறந்த அனுபவத்தைப்  பெறுவதை உறுதிசெய்கிறோம், ”என vivoவின் சிரேஷ்ட துணைத் தலைவரும், சி.எம்.ஓ உமான ஸ்பார்க் நி தெரிவித்தார்.

“வாழ்க்கையின் அற்புதமான மற்றும் சிறப்பான தருணங்களை கைப்பற்றவும் பகிர்ந்து கொள்ளவும் மக்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் மேலும் சிறப்பாக்கவும் நினைவில் கொள்ளத்தக்கதாகவும் மாற்ற நாங்கள் முயற்சி செய்கிறோம்.”

புதிய விளம்பர பிரசாரமானது ஐரோப்பா, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, சீனா ஆகிய நாடுகளில் தொலைக்காட்சிகளிலும், உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டகிராம் மற்றும் யூடியூபிலும் ஒளிபரப்பப்படுகின்றது. ரசிகர்கள் போட்டிகளுக்கு முன்னும் பின்னும் மற்றும் அதற்கு இடையிலும் அழகான தருணங்களை ரசிப்பதனையும், இவை காட்டுவதுடன், “உங்கள் போனுக்கு சிறிது ஓய்வு கொடுங்கள், மேலும் வாழ்க்கையின் அழகான தருணங்களை ரசியுங்கள் என்ற தகவலையும் அனுப்புகின்றது.

UEFA உடனான அதன் பங்குடமை மூலம், vivo உலகெங்கிலும் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட அதன் பரந்த பாவனையாளர் தளத்துடன் இணையவும் விரிவுபடுத்தவும் எதிர்பார்க்கின்றது.

“நாங்கள் எங்கள் உலகளாவிய வணிகத்தை விரைவாக விரிவுபடுத்துகையில், வாழ்க்கையின் அழகான தருணங்களின் மூலம் மக்களுடன் தொடர்புகொள்வது எமக்கு மிகவும் முக்கியமானது,” என்று ஸ்பார்க் நி குறிப்பிட்டார்.

“எங்கள் பாவனையாளர்களுடன் நெருக்கமாக இணைந்த வர்த்தகநாமம் என்ற வகையில், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுடன் இணைய UEFAவுடன் கைகோர்ப்பத்தில் vivo மிகவும் பெருமை கொள்கிறது.”

Vivo, முறையே ஜூன் 11 மற்றும் ஜூலை 11 ஆகிய திகளில் நடைபெறும் தொடக்க மற்றும் நிறைவு விழாக்களின் முதல் presenting partner  ஆகும்.  உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை உருவாக்க இந்த வர்த்தகநாமமானது UEFAவுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.

பார்வையாளர்கள் ஐரோப்பா முழுவதும் உள்ள அரங்கங்களுக்குத் திரும்பும்போது, ​​கட்டுப்பாடுகள் அரங்கில் ரசிகர்களின் அனுபவங்களைக் கட்டுப்படுத்துவதுடன், அந்தந்த நாடுகளில் உள்ள தனிமைப்படுத்தல் கொள்கைகளின் அடிப்படையில் இது மாறுபடும்.

UEFA இன் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் Guy-Laurent Epstein, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “உதைபந்து விளையாட்டு உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

மேலும், தீவிர ரசிகர்களை விளையாட்டுக்கு இன்னும் நெருக்கமாகக் கொண்டுவர vivoவுடன் பங்காளராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஒன்றாக மறக்க முடியாத நினைவுகளை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.”என்றார்.

“To Beautiful Moments” பிரசாரம் மற்றும் UEFA EURO 2020™ வுடன் தொடர்புபட்ட vivo வின் செயற்படுத்தல்கள் தொடர்பில் அறிந்து கொள்ள விஜயம் செய்யுங்கள், https://www.vivo.com/lk/activity/euro2020.

 

Hot Topics

Related Articles