உலகம்

கர்ப்பிணி மனைவியை கையில் சுமந்து கொண்டு 22 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்த கணவர்!

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு மத்தியில், திடீரென நோய்வாய்ப்பட்டிருந்த கர்ப்பிணி மனைவியை சுமந்து கொண்டு 22 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்துள்ள கணவர் குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

28 வயதான இவர் தனது மனைவியுடன் ஹினிதும பகுதியில் வசித்து வருகின்றார். 7 மாதமான அவரது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தை இரு நாட்களாக அசைவின்றி இருந்துள்ளது.

இதையடுத்து குடும்பநல பரிசோதகர் மனைவியை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மழை வெள்ளத்துக்கு மத்தியில் மனைவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வாகனம் எதனையும் ஏற்பாடு செய்ய முடியாத நிலையிலிருந்த கணவர் இறுதியாக மனைவியை தமது கைகளில் சுமந்தபடி 22 மீற்றர் தூரம் பயணம் செய்து வைத்தியசாலையில் சேர்த்துள்ளார்.

இரண்டு நாட்கள் சிகிச்சையின் பின் மனைவி உடல் நலம் தேறி வீட்டிற்கு வந்துள்ளார்.
கணவரின் இந்த செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீப நாட்களில் சமூக ஊடகங்களில் இது குறித்து நிறைய பேச்சுக்கள் வந்துள்ளன.

Hot Topics

Related Articles