உலகம்

“இந்தியாவில் கொரோனா 3-வது அலை வருவதற்கு வாய்ப்புகள் வலுவாக உள்ளன” – அரவிந்த் கெஜ்ரிவால்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 3-வது அலை வருவதற்கு வாய்ப்புகள் வலுவாக உள்ளதாக டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள 9 மருத்துவமனைகளில், அந்த மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஆக்சிஜன் ஆலைகளை தொடங்கி வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 3-வது அலை வருவதற்கு வாய்ப்புகள் வலுவாக உள்ளன. இதற்கான அறிகுறிகள் இங்கிலாந்தில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. அங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாம் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது.

கொரோனாவின் 3-வது அலை நம்மைத் தாக்கக்கூடாது என்று பிரார்த்திப்போம். ஆனால் அதையும் தாண்டி 3-வது அலை வந்தால், டெல்லி மீண்டும் ஒன்றுபட்டு நின்று போராடும்.

2-வது அலையை டெல்லி சந்தித்தபோது ஒன்றுபட்டு நின்று போராடி, கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டு, பரவலை கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ள மக்களைப் பாராட்டுகிறேன்.

கொரோனாவின் 2-வது அலையை வீழ்த்துவதில் டெல்லி மக்கள் தோளோடு தோள் நின்றனர். இதில் இணைந்து கொண்ட தொழில் துறையும் நன்றி பாராட்டத்தகுந்தது.

 

Hot Topics

Related Articles