உலகம்

ஜார்ஜ் பிளாய்ட் கொலையை காணொளியாக பதிவு செய்த பெண்ணுக்கு சிறப்பு புலிட்சர் விருது!

ஜார்ஜ் பிளாய்ட் பொலிஸ் அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு கொல்லப்பட்ட காணொளியை பதிவு செய்த டார்னெல்லா பிரேசியர் ஃபிரேசியர் என்ற இளம்பெணுக்கு உலகின் உயரிய கவுரவமாக கருதப்படும் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது 18 வயதான டார்னெல்லா ஃப்ரேஷியருக்கு அவரது தைரியத்திற்கான சான்று வழங்கப்பட்டது என்று புலிட்சர் குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள மினியாபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், சாலையில் வைத்து டெரிக் சாவின் என்றபொலிஸ் அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவி அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது அவருக்கு 17 வயது.

ஜார்ஜ் பிளாய்டின் கொலை வெளி உலகிற்கு தெரிய வருவதங்கு காணொளி மிக முக்கியமான காரணம் ஆகும்.

உலகம் முழுவதும் பரவிய காணொளியால், இந்த சம்பவத்திற்கு பல்வேறு நாட்டு மக்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

மேலும் கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற பெயரில், பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் இதற்கு முக்கிய காரணமாக விளங்கிய டார்னெல்லா ஃபிரேசியர் ஊடக பிரிவில் சிறப்பு புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Hot Topics

Related Articles