உலகம்

The Grand, Ward Place நாட்டு மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைகாக ‘The Grand Wellness Circle’ ஆரம்பிக்கப்படுகிறது

இலங்கையில் முன்னணி காணிகட்டட விற்பனைத் துறையில் முன்னோடிகளான பிரைம் குழுமம் அதிசொகுசு வீட்டுத் திட்டங்களான The Grand, Ward Place கொவிட் தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வீடுகளிலேயே தங்கியுள்ள அனைத்து இலங்கை வாழ் மக்களின் மனநிலை மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்தும் வகையில் The Grand Wellness Circle’ எனும் பெயரில் புதிய உடல் ஆரோக்கிய வேலைத்திட்ட தொடரை ஒன்லைன் தொழிற்நுட்பம் ஊடாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதற்காக நாட்டின் முன்னணி யோகா கலை பயிற்சியாளர் ஒருவர் மற்றும் உடல் பயிற்சி ஆலோசகர் ஒருவரின் தியான ஆலோசகர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

உடற்பயிற்சி வாரத்திற்கு சமாந்திரமாக ஆரம்பிக்கப்படும் ‘The Grand Wellness Circle’ இன் முதலாவது கட்டத்தில் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றளிக்கப்பட்;ட உகந்த யோகா மற்றும் தியான பயிற்சி ஆலோசகர் ஒருவரின் வழிநடத்துதல்களின் கீழ் எவ்வித கட்டணமும் இன்றி இந்த வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ள முடிவதுடன் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக ஒரு இடத்தில் முடங்கிக் கிடப்பதனாhல் ஏற்படும் மன மற்றும் உடல் ரீதியான அழுத்தத்தை கட்டுப்படுத்தி சமநிலையான வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான மன மற்றும் உடல் ரீதியான சுதந்திரத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக இந்த நாட்டில் நன்மதிப்புபெற்ற தற்பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் யோகா பயிற்சி ஆசிரியரான நந்த சிரிவர்தனவினால் ஆரம்பிக்கப்படுவதுடன் ஜூன் 9ஆம் திகதி மாலை 5 மணிக்கு மற்றும் இரவு 7 மணிக்கு அவரின் வழிநடத்துதலில் உலகளாவிய யோகா பயிற்சி அமர்வும் மற்றும் இணையத்தளத்தின் ஊடாக இலவசமாக இணைந்து கொள்ள முடியும்.

இரண்டாம் கட்டம் ஜூன் 11ம் திகதி இடம்பெறவுள்ளதுடன் அந்த கட்டம் பிரிட்டனின் முன்னணி உடல் ஆரோக்கிய மத்திய நிலையமான Onyx London இன் ஸ்தாபகரும் மற்றும் விளையாட்டு செயல்திறன் பயிற்சியாளரான விக் கொடிதுவக்குவினால் வழிநடத்துதல்கள் வழங்கப்படும்.

‘The Grand Wellness Circle’ இன் மூன்றாவது கட்டம் சீன யோகா தியானம் தொடர்பான நிபுணத்துவ பயிற்சி ஆலோசகரும் மற்றும் Soulful Yin Yoga வேலைத்திட்டத்தின் ஸ்தாபகருமான Annie Au இனால் வழிநடத்துதல்கள் பெற்றுக் கொடுக்கப்படும். உடற்பயிற்சி வாரத்திற்கு சமாந்திரமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனைத்து வேலைத்திட்டங்களின் மேலதிக தகவல்கள் ‘The Grand’ Facebook இல் பெற்றுக் கொள்ளலாம்.

‘சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்துவரும் உடல் ரீதியிலும் மற்றும்; மன ரீதியிலும் பாரிய அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ள எமது அன்பார்ந்த இலங்கையர்களை அந்த நிலைமையிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் அவர்களது உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்தை மீண்டும் பெற்றுக் கொடுக்கும் நோக்கமாக ‘The Grand Wellness Circle’ வேலைத்திட்டத் தொடர் எமது உடற்பயிற்சி வாரத்திற்கு சமாந்திரமாக அமுல்படுத்த முடிந்தமை குறித்து அளவிடமுடியாத மகிழ்ச்சி அடைவதுடன் இது எமது சமூக நல வேலைத்திட்டத்தின் சிறந்த மைல்கல்லாக அமைந்துள்ளது என்பதே எனது கருத்தாகும்.

எமது உடல் மற்றும் மன ஆரோக்கிய வேலைத்திட்டத்திற்காக கலந்து கொள்ளும் இலங்கையர்கள் இதன் ஒரு கட்டத்தில் கலந்து கொண்டாலே அவாகளின் உடல் மற்றும் மன ரீதியான சமநிலை ஏற்பட்டு சிறந்த மன நிலையும் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் சிறந்த நிலைமையை அடைந்து இந்த சவால் நிறைந்த காலப்பகுதியில் பயிற்சி வழங்கப்படுகின்றமையை காணக்கிடைக்கின்றமை எமது இயதபூர்வமான விருப்பமாகும்.

இந்த நடவடிக்கைகள் ஊடாக எமது வாழ்க்கைக்கு கிடைக்கும் பாடத்தை வெறுமனே ஒரு நடவடிக்கையாக மாத்திரம் எடுத்துக் கொள்ளாமல் எமது வாழ்க்கை முறையாக எடுத்துக் கொள்வீர்களாயின் அதனால் பெற்றுக் கொள்ளக்கூடிய உடல்; மன ரீதியான அனுகூலங்களை மதிப்பீடு செய்யமுடியாது என்பதே எனது கருத்தாகும்.

அத்துடன் சமூகத்திற்காக பொறுப்புக்கூறும் நிறுவன ரீதியான சமூக பிரஜையாக இலங்கையர்களின் வாழ்க்கையின் விழிப்புணர்வுக்காக தொடர்ச்சியாக முதலீடு செய்வதற்கு நான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.’ என பிரைம் குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராக்மனகே தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தின் அற்புதமான நீரலைகளையும் வானத்தின் அற்புதமான மேகக் கூட்டத்தை ரசிக்கும் வகையிலும் கொழும்பு நகருக்கு மேற்கே வானளாவிய உயரத்தில் அமைந்துள்ள The Grand Ward Place 160 மீற்றர் மற்றும் 37 அடுக்கு மாடிகளைக் கொண்ட கொழும்பு நகரில் சிறந்த பெறுமதியுடன் கூடிய நிலப்பரப்பில் அமைக்கப்படும் நாட்டின் முன்னணி அதிசொகுசு வீட்டுக் கட்டடத் தொகுதியாக இது அமைக்கப்பட்டுள்ளது என்றால் அது உண்மையான விடயமாக கருதமுடியும்.

இந்த அதி சொகுசு வீட்டுத் தொகுதியின் மற்றுமொரு விசெட அம்சமானது 125 மீற்றர் உயரத்தில் அதாவது இதன் 32ஆவது மாடியில் அமைக்கப்பட்டுள்ள 71 மீற்றர் நீளத்திலுள்ள Infinity நீச்சல் தடாகமாகும். நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள உயரம் கூடிய நீளத்தில் அதிகமான நீச்சல் குளமாக இது காணப்படுகிறது. தனி கட்டடமாக அமைக்கப்பட்டுள்ள சிறந்தத வீட்டுத் தொகுதியின் மற்றுமொரு சிறப்பம்சமாவது தனிப்பட்ட விதத்தில் உச்ச அளவில் பாதுகாப்பான விதுத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

தனிச் சுதந்திரத்தை பாதுகாக்கும் இந்த விசேட வீட்டு நிர்மாண அடையாளத்தை இலங்கையிலுள்ள வீட்டுத் தொகுதியில் காணக்கூடிய முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். மேலும் 50,000 சதுரப் பரப்பிற்கும் அதிகமான சூழலில் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இந்த வசதிகள் ஐந்தாவது, முப்பத்திரண்டாவது மற்றும் முப்பத்தி ஏழாவது மாடிகளில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The Grand Ward Place அதி சொகுசு வீட்டு கட்டடத் தொகுதி நாட்டில் வீட்டு நிர்மாணத் துறையில் சிறந்த வீட்டு நிர்மாணத் திட்டமாக காணப்படுவதுடன் அதன் ஆடம்பர அடுக்குமாடி வளாகத்தில் உள்ள ஒவ்வொரு அம்சத்திலும் அதன் சிறப்பம்சங்கள் பொதிந்துள்ளன. திட்டமிடல், உலக தரம்வாய்ந்த வீட்டு நிர்மாண நிபுணத்துவம், சிறந்த தரத்திலான கட்டட மூலப்பொருட்கள் மற்றும் வீட்டு அலங்கார உபகரணங்கள் இந்த ஆடம்பர வீட்டு தொகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

The Design Group Five International இந்த வீட்டு நிர்மாண நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகளை வழங்கியதுடன் தெற்காசியாவில் விசாலமான நிர்மாணிப்பு நிறுவனமான மாகா இஞ்ஜினியரிங் இதன் நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

 

Hot Topics

Related Articles