உலகம்

இலங்கை மாணவர்களுக்கு இங்கிலாந்தில் தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்கும் Study Group

முன்னணி சர்வதேச கல்வி வழங்குநரான Study Group, வெளிநாடுகளில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றினை ஆரம்பித்துள்ளது.

இதன் பிரகாரம் Study Group இன் பங்காளராகவுள்ள பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்கள், தமது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போதே தொழில் வாய்ப்பை பெறும் பொருட்டு, தமது திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த தொழில் தயார்படுத்தல் நிகழ்ச்சித்திட்டமானது குறிப்பாக இலங்கை மாணவர்கள் தொழிலொன்றை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கிலானதாகும்.

முக்கிய பரிமாற்றத்தக்க திறன்களை வளர்ப்பதற்கும், அவர்கள் கல்விகற்கும் போது பணம் சம்பாதிப்பதற்கும், பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு உலகளாவிய வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் இந்த நிகழ்ச்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Study Group இன் தொழில் அபிவிருத்தி பங்காளர்களால் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் போது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், சுயவிபரக்கோவையை தயாரிப்பதற்கான மற்றும் profile presentation ஆகியவற்றுக்கான உதவி வழங்கப்படும்.

அதேபோல், நேர்முகத் தேர்வுகள் மற்றும் பயிற்சி நேர்முகத் தேர்வுகள் ஊடாக மாணவர்களுக்கு பல நன்மைகள் கிடைப்பதுடன், நிகழ்ச்சித்திட்டம் நிறைவடைந்தவுடன் எதிர்கால தொழில் வழங்குனர்களுடன் தொழில் வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் மூன்றில் பங்குபற்றவும் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

அந்த நேர்முகத் தேர்வுகள் மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச கற்றல் மையம் அல்லது சர்வதேச கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள நிறுவனங்களில் நடாத்தப்படுகின்றன.

Study Group இன் முகாமைத்துவ பணிப்பாளர் ஜேன்ஸ் பிட்மன் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,“இந்த தொற்றுநோய் இலங்கையில் உள்ள நமது சர்வதேச மாணவர்களில் பலரின் குடும்பங்களை கடுமையாக பாதித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு Study Group, மாணவர்கள் தங்கள் கல்வி நடவடிக்கைகளைத் தொடரும் அதேவேளை அவர்களின் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்த உதவும் தொழில் தயார்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

CAS / iCAS மாணவர்களுக்கு மூன்று நேர்முகத் தேர்வு வாய்ப்புகளை வழங்குவதற்கும், இலங்கை மாணவர்கள் பட்டப்படிப்புகளை வெற்றிகரமாக முடித்த பின்னர் அவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கைக்குத் தயாராகும் போது அவர்களுக்கு உதவுவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்றார்.

இது தொடர்பில் Study Group இன் பிராந்திய பணிப்பாளர் – தெற்காசியா, ஸ்ரீனி பண்டார கருத்து தெரிவிக்கையில்,“Study Group இன் சிறந்த நிகழ்ச்சித்திட்டமான தொழிலுக்கான தயார்படுத்தல் நிகழ்ச்சித்திட்டமானது இலங்கை மாணவர்கள் உயர் கல்வியை பூர்த்தி செய்த பின்னர் அவர்கள் தொழிலில் இணைய தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சித்திட்டமாகும்.

இது இலங்கை மாணவர்கள் இங்கிலாந்திற்கு வந்தவுடனேயே அவர்களின் அடிப்படை திறன்களை மேம்படுத்தவும், அவர்கள் தெரிவு செய்த துறையில் நிபுணத்துவத்தை வழங்கவும் உதவும். இதன் விளைவாக, அவர்கள் இலங்கை தொழிற்படையில் நிலவும் திறன் வெற்றிடங்களை நிரப்ப போதுமான ஆற்றலைக் கொண்டிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றார்.

 

 

 

 

Hot Topics

Related Articles