யானை கூட்டம் ஒன்று சீனா முழுவதும் 300 மைல்கள் பயணத்தின் பின் ஆழ்ந்து உறங்குவது படம்பிடிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 16 ம் திகதி தெற்கு சீனாவின் ஒரு இயற்கை இருப்பிடத்திலிருந்து தப்பதித்த 15 யானைகள் சீனாவின் வடக்கே ஒரு நீண்ட அணிவகுப்பைத் தொடங்கியுள்ளன.
இந்த சிறப்பு மிக்க பயணத்தில் விவசாய நிலங்களில் இதுவரை 1 மில்லியன் அமெரிக்க டொலர் பெருமதியான அழிவை இவை ஏற்படுத்தியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது சீனாவில் விவசாய நிலங்களை மிக நீண்ட இடம்பெயர்வு என தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழு ஒரு காட்டில் நீண்ட பயணத்தின் பின் ஒன்றாக படுத்து உறங்கின. இதில் குட்டியானைகளும் இருக்கின்றன.
ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் யானைகளை சீன அரசு கண்காணித்து வருகிறது.
ஆங்காங்கே போலீசார் மற்றும் அவசர உதவிக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த யானைகள் குழுவில் இருந்து பாதி வழியில் இரு யானைகள் வனப்பகுதிக்கு திரும்பி விட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
இவை நகருக்குள் வருவதை தடுக்க சாலைகளின் குறுக்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
‘யானைகளை யாரும் துன்புறுத்த வேண்டாம்; பட்டாசுகளை வெடித்து துரத்த வேண்டாம்’ என அரசு உத்தரவிட்டுள்ளது.
யானைகளை பக்குவமாக வனப் பகுதிக்கு திருப்பி விட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.