உலகம்

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் 25 பெரும் பணக்காரர்கள் வரி கட்டுவதில் மோசடி!

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், டெஸ்லாவின் எலான் மஸ்க் உள்ளிட்ட அமெரிக்காவின் 25 பெரும் பணக்காரர்கள் 2014 முதல் 2018 காலக்கட்டத்தில் வருமான வரிகட்டுவதில் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, ‘புரோபப்ளிகா’ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் அந்நாட்டின் மத்திய அரசுக்கு மிகக் குறைந்த வரியும், சில சமயங்களில் வரியே செலுத்தாமலும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ‘புரோபப்ளிகா’ பத்திரிகையானது லாபநோக்கமற்ற, பொது நலன் சார்ந்த புலனாய்வு கட்டுரைகளை வெளியிடும் ஒரு இதழ்.

அந்நாட்டின் 25 பெரும் பணக்காரர்கள் வரி சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி சொற்பமான வரியே செலுத்தியிருப்பதை அப்பத்திரிகை வெளிகொண்டு வந்துள்ளது.

வரி தொடர்பான விஷயங்களை கையாளும் அமெரிக்க அரசின் உள் வருவாய் சேவைத் துறையிலிருந்து இத்தகவல்களை எப்படியோ பெற்று வெளியிட்டுள்ளனர்.
இவ்விவகாரம் அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hot Topics

Related Articles