உலகம்

விண்வெளிக்கு பயணிக்கிறார் அமேசான்நிறுவனத்தின் நிறுவனரான ‌ஜெப் பெசோஸ்!

அமேசான்நிறுவனத்தின் நிறுவனரான ‌ஜெப் பெசோஸ், அடுத்த மாதம் (ஜூலை) 20-ந் திகதி விண்வெளிக்கு பயணிக்க உள்ளார்.

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான்நிறுவனத்தின் நிறுவனரான ‌ஜெப் பெசோஸ்,புளூ ஆரிஜின்என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வதை நோக்கமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் புளூ ஆரிஜின் நிறுவன தயாரிப்பான நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலத்தின் முதலாவது பயணத்தில், ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு செல்ல உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம் (ஜூலை) 20-ந் திகதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின்போது ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரருடன் மேலும் ஒருவர் இணையலாம்.

மேலதிக இருக்கையை ஏலத்தில் விட தொடங்கியிருக்கிறது புளூ ஆரிஜின் நிறுவனம்.
இந்த ஏலம் வருகிற 12-ந் திகதி நிறைவு பெறுகிறது. இந்த நிலையில், 3-வது இருக்கைக்கான ஏலம் தொடங்கியது முதல் 143 நாடுகளில் இருந்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஏலம் கேட்டனர்.

அதில் அதிகபட்சமாக ஒருவர் 2.8 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 கோடி) ஏலம் கேட்டது தெரிய வந்துள்ளது.

எனினும் ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதருடன் விண்வெளிக்கு செல்ல உள்ள மூன்றாவது நபர் யார் என்பது வருகிற 12-ந் திகதியின் பின்புதான் முடிவாகும்.

 

Hot Topics

Related Articles