பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை நபர் ஒருவர் பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து குறித்த நபரும் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்சின் தென்கிழக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பொதுமக்களை சந்தித்து வருகின்றார்.
அதன்படி இன்று (08) வேலன்ஸ் நகரத்திற்கு வெளியே டெய்ன்-எல் ஹெர்மிட்டேஜுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பொதுமக்களை சந்தித்த போது அங்கு நின்றிருந்த நபர் ஒருவர் அவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காணொளியில் குறித்த நபரிடம் ஜனாதிபதி நெருக்கமாக உரையாட செல்லும் போது அவர் தாக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இதையடுத்து ஜனாதிபதி விலகிச் செல்கிறார்.
அத்தோடு, “டவுன் வித் மக்ரோன்-இஸ்ம்” என கூட்டத்தில் இருப்பவர்கள் குரல் எழுப்புகின்றனர்.
#Macron se fait gifler en direct de #Tain pic.twitter.com/tsXdByo22U
— ⚜️ (@AlexpLille) June 8, 2021
இந்த சம்பவம் தொடர்பில் அரசியல்வாதிகள் பலரும் தமது கண்டனங்களை வெயிட்டு வருகின்றனர்.