உலகம்

3 வயது மேற்பட்ட சிறுவர்களுக்கு சினோவாக் தடுப்பூசி செலுத்த சீனாவில் அனுமதி!

சினோவாக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை 3 வயது முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கு அவசரமாகப் பயன்படுத்த இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்தத் தடுப்பூசியை எந்த வயதினரிடமிருந்து தொடங்குவது என்று முடிவு செய்யவில்லை என சினோவாக் நிறுவனத் தலைவர் யின் வெய்டாங் தெரிவித்துள்ளார்.

சினோவாக் இந்த கொரோனா தடுப்பூசிக்கான முதற்கட்ட, இரண்டாம் கட்ட சோதனைகளை மட்டுமே முடித்துள்ளது. இதனையடுத்து இந்த தடுப்பூசி பாதுகாப்பானதே என்ற முடிவுக்கு வந்தது சீனா.

உள்நாட்டில் வாக்சின் பயன்படுத்தப்படுவதோடு சீனா வெளிநாடுகளுக்கும் வாக்சின் ஏற்றுமதி செய்து வருகிறது. பல நாடுகளுக்கு நன்கொடையாகவும் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது சீனா.

இதுவரை சீனாவில் 763 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 5 தடுப்பூசிகளை சதமது நாட்டில் அவசரகால பயன்பாட்டுக்காக சீனா அனுமதித்துள்ளது. கோவாக்ஸ் அமைப்புக்கு சீனா 10 மில்லியன் வாக்சின் டோஸ்களை அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள சினோவாக் மற்றும் சினோபார்ம் மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles