உலகம்

தேசபந்து திலக் டி சொய்ஸா OrphanCare காப்பாளர் சபையில் இணைவு

புகழ்பெற்ற வர்த்தக செயற்பாட்டாளரான தேசபந்து திலக் டி சொய்ஸா, OrphanCare இன் சுயாதீன காப்பாளர் சபையில் இணைந்துள்ளார். அநாதரவான சிறுவர்களின் கவனிக்கப்படாத தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தும் நோக்கில் சுயாதீன நிதியமாக நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படும் OrphanCare இனூடாக, அநாதரவான சிறுவர்கள் 18 வயதை எய்தியதும், அநாதை இல்லங்களிலிருந்து வெளியேறும் போது, தமது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அவசியமான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பங்களிப்பு வழங்கப்படுகின்றது. சகல OrphanCare செயற்பாடுகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் அமானா வங்கியினால் முழு அனுசரணை வழங்கப்படுகின்றது.

இலங்கை வர்த்தக சமூகத்தில் புகழ்பெற்ற நபராகத் திகழும் திலக் டி சொய்ஸா, தமது மனிதநேய பணிகளுக்காகவும் புகழ்பெற்றுள்ளார். இலங்கையின் வசதிகள் அற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கு உதவும் முன்னணி அரச சார்பற்ற அமைப்பான HelpAge இன் தவிசாளராக திகழ்கின்றார்.

சர்வதேச தூதுவரும் HelpAge இன்டர்நஷனல் (ஐக்கிய இராஜ்ஜியம்) முன்னாள் தவிசாளருமான இவர் நாட்டுக்கு ஆற்றியுள்ள பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளுக்காக இலங்கையின் ஜனாதிபதியினால் தேசபந்து எனும் கீர்த்தி நாமம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானிய முடியரசரினால் வழங்கப்படும் “The Order of the Rising Sun – Gold Rays with Neck Ribbon” எனும் கௌரவிப்பையும் இவர் பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளருக்காக  LMD கௌரவிப்பையும் திலக் பெற்றுள்ளார்.

காசன்ஸ் கம்பர்பட்ச் பிஎல்சி, அசோசியேட்டட் சியெட் (பிரைவட்) லிமிடெட், அமாயா ஹோட்டல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் USA (Radisson), ஜெட்விங் சிங்க் ஜேர்னி லங்கா (பிரைவட்) லிமிடெட், ட்ரினிட்டி ஸ்டீல் (பிரைவட்) லிமிடெட், சிஜி கோர்ப் குளோபல் ஸ்ரீ லங்கா மற்றும் சசகாவா ஞாபகார்த்த இலங்கை ஜப்பான் கலாசார நிலைய நிதியம் ஆகியவற்றின் பணிப்பாளர் சபையின் தலைவராக திலக் திகழ்கின்றார். மேலும், இலங்கையில் AMW இன் உரிமம் பெற்ற Al- Futtaim குரூப் ஒஃவ் கம்பனிஸின் ஆலோசகராக திகழ்வதுடன், ஆலோசகர் சபையில் தலைமைத்துவத்தையும் வகிக்கின்றார்.

சியெட் களனி ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடெட் மற்றும் ஒரியன்ட் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் உப தவிசாளராக திலக் திகழ்வதுடன், Tal லங்கா ஹோட்டல்ஸ் பிஎல்சி (Taj), Tal ஹோட்டல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் லிமிடெட், நவலோக ஹொஸ்பிட்டல்ஸ் பிஎல்சி, அசோசியேட்டட் இலெக்ரிகல் கோர்பரேஷன் லிமிடெட், INOAC பொலிமர் லங்கா (பிரைவட்) லிமிடெட், Cinnovation INC மற்றும் வருண் பெவரேஜஸ் லங்கா (பிரைவட்) லிமிடெட் (பெப்ஸி) ஆகியவற்றிலும் அங்கம் வகிக்கின்றார்.

கொழும்பு YMBA இன் முன்னாள் தலைவர் என்பதுடன், இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் தேசிய வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றின் முன்னாள் தவிசாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2003 முதல் 2009 வரையான காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் அங்கத்தவராகவும் பணியாற்றியுள்ளார்.

OrphanCare நம்பிக்கை நிதியத்துடன் இணைந்து கொண்டமை தொடர்பில் திலக் டி சொய்ஸா கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த இரு தசாப்த காலமாக Helpage ஸ்ரீ லங்காவின் தவிசாளராக செயலாற்றி வருவதுடன், கடந்த இரு ஆண்டுகளாக HelpAge இன்டர்நஷனல் (ஐக்கிய இராஜ்ஜியம்) இன் தலைவராக செயலாற்றியுள்ள நிலையில், இலங்கையின் குறைந்த வசதிகள் படைத்த வயது முதிர்ந்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது என்பது எனது பிரதான இலக்காகவும் நோக்காகவும் அமைந்துள்ளது.

எமது நாட்டின் துரதிர்ஷ்டவசமான அநாதரவானவர்களுக்கு அவசியமான அன்பையும் அரவணைப்பையும் வழங்குதில் பங்களிப்பு வழங்கி வரும் இந்த பெருமைக்குரிய ‘OrphanCare Trust’உடன் இணைந்து பணியாற்றுவதற்கு நான் பெருமளவு எதிர்பார்க்கின்றேன்.” என்றார்.

OrphanCare Trust இன் காப்பாளர் சபையில் அங்கத்தவராக திலக் டி சில்வா இணைந்து கொண்டமை தொடர்பில் OrphanCare Trust இன் தவிசாளர் ருஸ்லி ஹுசைன் கருத்துத் தெரிவிக்கையில், “எமது இந்த பணிக்கு திலக் போன்ற அனுபவம் நிறைந்தவர் இணைந்து கொண்டுள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம்.

உலகளாவிய ரீதியில் பல அறப்பண்புகளைக் கொண்ட செயற்திட்டங்களை நிர்வகித்த அனுபவத்தகை் கொண்டுள்ள நிலையில், நாட்டிலுள்ள அநாதரவான சிறுவர்களுக்கு அவசியமான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய சிறந்த நிலையில் OrphanCare காணப்படுகின்றது என நான் நம்புகின்றேன்.” என்றார்.

OrphanCare Trust உடன் திலக் டி சொய்ஸா இணைந்துள்ளதைத் தொடர்ந்து இந்த சபையில் அடங்கியுள்ளவர்களின் விவரம் வருமாறு: தவிசாளர் ருஸ்லி ஹுஸைன் (இலங்கையில் Roteract அமைப்பின் ஸ்தாபகர்), ஒஸ்மான் காஸிம் (அமானா வங்கியின் ஸ்தாபக தலைவர்), கே ஆர் ரவீந்திரன் (Rotary மையத்தின் காப்பாளர் சபை தவிசாளர் மற்றும் முன்னாள் Rotary இன்டர்நஷல் தலைவர்), ரொஹான் துடாவே – பொருளாளர் (தவிசாளர் துடாவே பிரதர்ஸ்), ஷராத் அமலீன் (இணை ஸ்தாபகர் MAS ஹோல்டிங்ஸ்), தையிப்  அக்பராலி (அக்பர் பிரதர்ஸ் சிரேஷ்ட பணிப்பாளர்), ஹர்ஷ அமரசேகர (ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் CIC ஹோல்டிங்ஸ் தவிசாளர்), ஜஸ்ரி மக்தொன் இஸ்மைல் (AAT இன் முன்னாள் தலைவர்) மற்றும் மொஹமட் அஸ்மீர் (அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி).

சவால்கள் நிறைந்த சூழலிலும், OrphanCare இனால் இதுவரையில் நாடு முழுவதையும் சேர்ந்த 80 க்கும் அதிகமான அநாதைகள் இல்லங்களிலிருந்து 3000க்கும் அதிகமான அநாதரவான சிறுவர்கள் இந்த நிதியத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களின் கணக்குகளுக்கு தொடர்ச்சியாக தடங்கலில்லாத காலாண்டு நிதிப் பங்களிப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இந்தத் திட்டத்துக்கு பெருமளவு வரவேற்பும் கௌரவிப்பும் கிடைத்துள்ளதுடன், அமானா வங்கிக்கு ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வு வர்த்தக நாமத்துக்கான விருதை குளோபல் பாங்கிங் அன்ட் ஃபினான்ஸ் விருதுகள் வழங்கும் நிகழ்வில் வெற்றியீட்டுவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது.

அத்துடன், SLIBFI விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த சமூக மேம்படுத்தல் செயற்திட்டம், தெற்காசிய IFFSA விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம் மற்றும் IRB விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த சமூகப் பொறுப்பு வாய்ந்த வங்கி ஆகிய விருதுகளை வெற்றியீட்டுவதற்கும் ஏதுவாக அமைந்திருந்தது.

 

Hot Topics

Related Articles