உலகம்

கோபத்திற்கும் கொரோனாவிற்கும் தொடர்பு இருக்கிறதா? 

மனிதர்களின் வாழ்க்கை புரட்டிப்போட்டுள்ள கொரோனா பெரும் தொற்று காரணமாக பொருளாதார நெருக்கடி, சுகாதார நெருக்கடி என பல நெருக்கடிகளுக்கு உலகம் முகம் கொடுத்துள்ளது.

இதனிடையே கொரோனா சிகிச்சைக்கு உள்ளாகியிருப்பவர்களில் 58 சதவீதம் பேர் அதிகமாக கோபம்கொள்ளவதாக ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

கொரோனா பாதித்தவர்களின் சுபாவத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளனவர் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் சுபாவங்களிலும் மாற்றம் உருவாகியுள்ளது.

அவர்கள் அந்த நிலையில் இருந்து மாறி இயல்புக்கு வர சில மாதங்கள் ஆவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்படுபவர்களின் மன நலம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறானவர்கள் மன நலமருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

முழுமையான இலவச சிகிச்சை மற்றும் எளிதாக குணமடையும் சூழ்நிலை இருந்தும் கொரோனா பாதித்த ஒருசிலர் தற்கொலை செய்துகொள்வது இவ்வாறன சூழ்நிலையில் தான்.

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியும் இதுவரை முழுநிலையில் தயாராகவில்லை. நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

கொரோனா நோய் குறித்து பரப்பப்படும் தகவல்கள் காரணமாக பலர் பெரும் அச்சம் கொள்கிறார்கள்.

சிலர் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் உயிரிழப்பு எண்ணிக்கை போன்றவை காரணமாக மிகவும் குழப்பத்திற்கு உள்ளாகின்றனர்.

இதுபோன்ற பயத்தில் காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகம்.
எனினும் இவ்வாறான அச்சத்தில் இருந்து நாம் வெளியில் வரவேண்டும்.

உலக அளவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 98% மானவர்கள் குணமடைந்துள்ளனர். 2% மானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். எனவே அனைவரும் தேவையற்ற பயத்தில் இருந்து அகலவேண்டும்.

கொரோனா வந்தாலும் அதில் இருந்து மீளமுடியும் என்று நம்பிக்கை கொள்ளவேண்டும். நம்பிக்கை கொண்டால் தற்கொலை எண்ணம் தோன்றாது. நம்பிக்கைதான் வாழ்க்கை.

Hot Topics

Related Articles