உலகம்

கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் வாகனத்திலிருந்து குதித்ததில் மரணம் – இரு பொலிஸ் அதிகாரிகள் கடமையிலிருந்து இடைநிறுத்தம்!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரின் வாகனத்திலிருந்து தப்பிக்க முயன்ற போது மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து குறித்த நபரை கைது செய்த உப பொலிஸ் அதிகாரியும் பொலிஸ் பரிசோதகரும் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

48 வயதான குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் (06) கைது செய்யப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் பொலிஸாரின் வாகனத்திலிருந்து வெளியில் பாய்ந்து தப்பிக்க முயன்ற போது கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

Hot Topics

Related Articles