உலகம்

இந்தியாவில் ரயில்களில் ‘டிக்கட்’ இன்றி பயணித்த 27 லட்சம் பேரிடம் ரூ.143 கோடி அபராதம்!

இந்தியாவில் ‘கடந்த நிதியாண்டில் நாடு முழுவதும் ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பிடிபட்ட 27.57 லட்சம் பேரிடம் அபராதமாக ரூ.143 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் எழுப்பிய கேள்விக்கு, ரயில்வே வாரியம் இந்த பதிலை வழங்கியுள்ளது.

கடந்த 2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரையிலான நிதியாண்டில் நாடு முழுதும் ரயிலில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததாக 27.57 லட்சம் பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு அபராதமாக ரூ.143.82 கோடி விதிக்கப்பட்டது.

இதேவேளை கடந்த 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரையிலான நிதியாண்டில் இதேபோல் பயணச்சீட்டு இல்லாமல் 1.10 கோடி பேர் இந்தியாவில் பிடிப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து ரூ.561.73 கோடி அபாரதமாக வசூலிக்கப்பட்டதாகவும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

‘கொரோனா தொற்று காரணமாக ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதே கடந்த நிதியாண்டில் பயணச்சீட்டு இல்லாமல் பிடிபட்டோரின் எண்ணிக்கை 25 சதவீதம் அளவுக்கு குறைவதற்கு காரணம்’ என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles