உலகம்

ஜனாதிபதியின் டுவிட்டர் பதிவை நீக்கியமைக்காக டுவிட்டரை தடை செய்தது நைஜீரியா!

உள்ள முகமது புஹாரியின் டுவிட்டர் பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியதையடுத்து தங்கள் நாட்டில் டுவிட்டர் சமூக வலைதளத்துக்கு தடை விதித்துள்ளது.

நைஜீரிய நாட்டின் ஜனாதிபதி உள்ள முகமது புஹாரி அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு உள்நாட்டு யுத்தம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

இது தொடர்பாக முகமது புஹாரி தனது டுவிட்டர் பகக்த்தில் பதிவிட்டிருந்தார்.
குறித்த பதிவில்,
“ தற்போது தவறாக நடந்துகொள்பவர்கள் பலரும் மிகவும் இளம் வயதினர். நைஜீரிய உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட அழிவு மற்றும் உயிர் இழப்புகள் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அவர்களின் மொழியில் புரிய வைப்போம்” என்று பதிவிட்டிருந்தார்.

நைஜீரியாவில் கடந்த 1967-70ம் ஆண்டுகளில் நிகழ்ந்த உள்நாட்டு போரை மேற்கோள் காட்டியே அவர் இந்த டுவிட்டை பதிவிட்டிருந்தார். இந்த போரில் 10 முதல் 30 லட்சம் மக்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், ஜனாதிபதியின் இந்த டுவிட் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளதாக சர்ச்சை எழுந்தது.

இதையடுத்து, முகமது புஹாரியின் பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. இதனால், ஆத்திரமடைந்த நைஜீரிய அரசு, தங்கள் நாட்டில் டுவிட்டர் சமூக வலைதளத்துக்கு தடை விதித்துள்ளது. நைஜீரிய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Hot Topics

Related Articles