உலகம்

“கோஹோமத சுது” குறுந்தகவல் அனுப்பியதால் மோதல் : அயல் வீடுகளை சேர்ந்த இரு கணவர்கள் வைத்தியசாலையில்!

கொழும்பு,பொரளை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குடியிருப்பு பகுதியில் அயல் வீட்டு ஆண் நபருக்கு பெண் ஒருவர் “கோஹோமத சுது” (“எப்படி இருக்கிறீர்கள்”  என சிங்கள மொழியில் அன்புக்குறியவரை வினவுவது) என குறுந்தகவல் அனுப்பியுள்ளதாக தெரிய வருகின்றது.

கணவர் இது குறித்து விசாரித்தபோது குறுந்தகவல் தவறுதலாக அனுப்பப்பட்டதாக அந்தப் பெண் தனது கணவரிடம் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.

எனினும் அந்த நபர் தனது மனைவிக்கும் அயல் வீட்டு நபருக்கும் இடையே தகாத உறவு உள்ளதாக அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இதையடுத்து குறித்த பெண்ணின் கணவர் குறுந்தகவல் தொடர்பில் அயல் வீட்டு நபருடன் முரண்பட்டுள்ளார்.

இதையடுத்து இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கும் கணவர்களுக்கும் இடையே மேதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் இரு குடும்பங்களை சேர்ந்த 8 பேர் கத்திக்குத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

கணவர்கள் இருவரும் பலத்த கத்திக்குத்து இலக்கான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கணவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தேசிய வைத்தியசாலையில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hot Topics

Related Articles