வருடாந்தம் 183% வளர்ச்சியுடன் ஐரோப்பாவின் திருப்புமுனையாகும் ஸ்மார்ட்போன்

உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் நுகர்வோர் தொழில்நுட்ப தரக்குறியீடான realme ஆனது, 2021 முதல் காலாண்டில் உலகளவிய ரீதியில் 12.8 மில்லியன் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளதாக, Counterpoint ஆய்வுத் தரவுகள் தெரிவித்துள்ளன.

realme ஆனது, உலகெங்கிலும் உள்ள 13 நாடுகளில் முதல் ஐந்து இடங்களில் உள்ள ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன், 2021 முதல் காலாண்டின் இறக்குமதியின் அடிப்படையில், முதன்முறையாக மூன்று ஐரோப்பிய நாடுகளின் விற்பனையாளர்களில் முதல் நான்கு இடங்களில் உள்ள தரக்குறியீடாக, Canalys உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டில் ஐரோப்பிய சந்தையில் தனது பரவலாக்கத்தை தொடர்ந்து, இப்பிராந்தியத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக realme உருவெடுத்துள்ளது. அதற்கான சான்றாக, 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ஆண்டுக்கு 183% வளர்ச்சியை அடைந்துள்ளதாக, Counterpoint Research ஆய்வுத் தகவல் குறிப்பிடுகிறது.

realme நிறுவனம், ஏற்றுமதியின் அடிப்படையில், செக் குடியரசு மற்றும் கிரீஸ் ஆகிய இரண்டு நாடுகளிலும் முறையே 4,104% மற்றும் 4,77% எனும் வளர்ச்சி விகிதங்களுடன் அந்நாடுகளில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. realme ஆனது ஸ்லோவேனியாவிலும், நான்காவது இடத்தில் உள்ளதுடன், ரஷ்யாவில் 682% வருடாந்த வளர்ச்சியுடன், ஐந்தாவது இடத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளதன் மூலம், அதன் வலுவான வளர்ச்சி வேகத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில், realme ஆனது, பிலிப்பைன்ஸில் 23% சந்தைப் பங்கையும் 95% வருடாந்த வளர்ச்சியுடன் மீண்டும் முன்னணியில் திகழ்கின்றது. கம்போடியாவில் 379% வருடாந்த வளர்ச்சியையும் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில், இரட்டை இலக்க வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. இதேவேளை இந்தியாவில், realme ஆனது,12% சந்தைப் பங்கோடு இணைந்தவாறு ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளதுடன், முதல் நான்கு இடங்களில் உள்ளவர்களை மிக நெருக்கமாகப் பின்தொடர்ந்து வருகின்றது.

realme நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Sky Li கருத்துத் தெரிவிக்கையில், “2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பல்வேறு நாடுகளின் சந்தைகளில், குறிப்பாக கிழக்கு ஐரோப்பாவில் சாதனை வளர்ச்சியுடன் எமது வலுவான வளர்ச்சிப் பாதையைத் தொடர்ந்தும் பேணி வருகிறோம் என்பது தொடர்பில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

இது நாம் உரிய பாதையில் பயணிப்பதைக் காட்டுவதோடு, உலகின் சிறந்த ஸ்மார்ட்போன் வழங்குனர்களில் ஒருவராக திகழ்வதையும் சுட்டிக்காட்டுகிறது. ‘முன்னேறுவதற்கு பயமில்லை‘ (‘Dare to Leap’)  எனும் எமது தரக்குறியீட்டின் உயிர்நாடிக்கு அமையவும், இன்றைய இளம் நுகர்வோருக்கு அதிகளவான போட்டி மிக்க தயாரிப்புகளை வழங்கி அவர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவன் காரணமாகவும், இந்த வளர்ச்சி தொடருமென நாம் நம்புகிறோம்.” என்றார்.

Canalys இன் Mobility பிரதித் தலைவர் Nicole Peng கருத்து வெளியிடுகையில், “உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில், 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வலுவான மீட்சியைக் காண்பிக்கும் வகையில், 347.7 மில்லியன் சாதனங்களை வெளியிட்டுள்ளது. இது கொவிட் தொற்றுநோயின் முதல் தாக்கத்தின் போதிலும் பார்க்க 27.6% அதிகரிப்பாகும்.

ஒப்பீட்டளவில் ஒரு இளம் நிறுவனமான realme, கடந்த 12 மாதங்களில் அதன் விரிவாக்கத்தை துரிதப்படுத்தியுள்ளதுடன், ஒவ்வொரு காலாண்டிலும் சராசரியாக 45% இற்கும் அதிகமான வளர்ச்சியை காண்பித்து வருகிறது. இது முக்கியமாக உலகளாவிய ரீதியில் அதன் துடிப்பான Gen Z நுகர்வோர் தளத்தையும், தனித்துவமான கூட்டாளர்களையும் கொண்டுள்ளதன் மூலமான, தொடர்ச்சியான உந்துதலுக்கு காரணமாக அமைகின்றது.” என்றார்.

 

Canalys இன் 2021 முதல் காலாண்டு உலகளாவிய ஏற்றுமதி அறிக்கையின்படி, ஏற்றுமதியின் அடிப்படையில், பின்வரும் 13 நாடுகளில் realme முதல் ஐந்து ஸ்மார்ட்போன் தரக்குறியீடுகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளது: இந்தியா, இந்தோனேசியா, பங்களாதேஷ், கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, எகிப்து, இஸ்ரேல், செக் குடியரசு, கிரீஸ், ஸ்லோவேனியா.

Hot Topics

Related Articles