“ப்ளூ டீ ” குடிப்பதால் இவ்வளவு நன்மையா?

ப்ளூ டீ என்றதும் இது என்ன புதுசா இருக்கேனு நினைக்காதிங்க. பாட்டிவைத்தியத்தில் இருந்து வந்தது தான் இந்த “ப்ளூ டீ” .

நீல நிற சங்குப்பூவில் மூலம் தயாரிக்கப்படுவதாகும் ப்ளூ டீ ஐ அருந்துவதால் உடலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் அது தயாரிக்கும் முறையையும் பார்க்கலாம்.

ப்ளூ டீ தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு. ப்ளூ டீ அருந்துவதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமானது மன அழுத்தத்தை தவிர்க்க உதவுவதாகும்.

ப்ளூ டீ: எடை இழக்க உதவும் இந்த மூலிகை தேநீர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்..!! - Update News360 Tamil | DailyHunt
கிரீன் டீ தயாரிப்பது போன்ற இதையும் தயாரிக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரில் சில சங்குப்பூக்களை போட்டு 5 நிமிடம் கழித்தவுடன் இறக்கி வடிகட்டிக்கொள்ள வேண்டும்.

அதில் எலுமிச்சை சாறு சில சொட்டுகள் விட்டு தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகலாம்.

சங்கு பூ, நமது நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கி மன அழுத்தம், பயம், தயக்கம் போன்றவற்றை சரி செய்யும்.

எனினும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோர் கட்டாயம் தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி ப்ளூ டீ அருந்தக்கூடாது.

சங்கு பூவைபுற்றுநோய் முதல் சர்க்கரை நோய் வரை பல நோய்களை தடுக்கும்.
இயற்கையின் வர பிரசாதமான சங்கு பூ, சர்க்கரையின் அளவை உடலில் கட்டுப்படுத்துமாம்.

சங்குப் பூ மாலை | Sangu Poo Malai | - YouTube
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கி நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் உதவும் என “காம்பிளிமெண்டரி மற்றும் ஆல்டர்னேட்டிவ் மெடிசின்’ என்ற ஆய்வு இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

சங்கு பூ டீ குடற்புண்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது. மேலும் ஜீரண கோளாறுகள், வயிற்று எரிச்சல் போன்றவற்றையும் இது சரி செய்யும்.

 

 

Hot Topics

Related Articles