உலகம்

அத்தியாவசிய சேவைகள் குறித்து புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், சுங்கம், புகையிரதம் மற்றும் போக்குவரத்துசபை என்பவையும் அனைத்து மாவட்ட , பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மத்திய மற்றும் காப்புறுதி உள்ளிட்டவையும் அத்தியாவசிய சேவையாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1979 (61) அத்தியாவசிய பொது மக்கள் சேவை சட்டத்தின் இரண்டாம் உறுப்புரையின் கீழ் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளுக்கமைய அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Hot Topics

Related Articles