உலகம்

அஸ்ராஜெனேகா இலங்கைக்கு விடுத்துள்ள வேண்டுகோள்

அஸ்ராஜெனேகா தடுப்பூசியை தனியார்நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யவேண்டாம் என அஸ்ராஜெனேகா இலங்கையை கேட்டுக்கொண்டுள்ளது.

 


தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் தடுப்பூசிகள் போலியானவையாக இருக்கலாம் என அஸ்ராஜெனேகா தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனியார் தடுப்பூசிகளை விற்பனை செய்ய முன்வந்தால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டு உடனடியாக உரிய தரப்பிற்கு அறிவிக்க வேண்டும் என அஸ்ராஜெனேகா தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் எந்த விநியோகத்தையும் மேற்கொள்ளவில்லை அவர்கள் விற்பனை செய்வதற்கான அனுமதியை விநியோகிப்பதற்காக வழங்கவில்லை என அஸ்ராஜெனேகாவின் ஆசியாவிற்கான பொறுப்பதிகாரி ஜஸ்பெர் மெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தனியார் வழங்க முன்வரும் தடுப்பூசிகள் போலியானவையாக காணப்படலாம் என தெரிவித்துள்ள அவர் ஆகவே இவற்றை நிராகரித்துவிட்டு உரிய தரப்பிற்கு அறிவிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு அஸ்ராஜெனேகா தடுப்பூசியை வழங்கும் சகாக்களாக கொவக்ஸ், யுனிசெவ், மற்றும் சீரம் நிறுவகங்கள் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

 

Hot Topics

Related Articles