பசித்தால் எடுத்துக்கொள் – ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் அஜித் ரசிகர்கள்!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு திரைபிரபளங்களும் அவர்களின் ரசிகர்களும் உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் ரசிகர்கள் செய்து வரும் உதவி பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

நடிகர்கள் உதவி
புதுச்சேரியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு அஜித் ரசிகர்கள் உணவளித்து வருகின்றனர்.

பசித்தால் எடுத்துக்கொள் பசித்தால் எடுத்துக்கொள் என்ற பதாதையுடன் தள்ளுவண்டியில் உணவு பொதிகளையும் வாழைப்பழங்களையும் வைத்துள்ளனர்.

அஜித் ரசிகர்கள் உதவி
இதனை உணவு தேவைப்படும் மக்கள் மகிழ்ச்சியோடு எடுத்து செல்கின்றனர். அஜித் ரசிகர்களின் இந்த உதவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

Hot Topics

Related Articles