நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

 

நடிகரும் தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

68 வயதான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இந்நிலையில் இவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கையொன்றை வெளியிடவுள்ளது.

UPDATE:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தேமுதிக தலைமைக்கழகம்  அறிக்கை வெளியிட்டுள்ளது

அதில்,

* விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது.

* தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான  மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து  விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

Hot Topics

Related Articles