“சூரரைப் போற்று” – உலகளவில் 3-வது இடத்தை பிடித்து சாதனை!

உலகளவில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 1000 திரைப்படங்களின் பட்டியில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

இந்த பட்டியலை பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது.

இந்த தரப்படுத்தலில் சூரரைப் போற்று திரைப்படம் 9.1 ரேட்டிங் புள்ளிகள் கிடைத்துள்ளது.

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’.

சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இதேவேளை, ஷஷாங் ரிடம்ப்ஷன் திரைப்படம் 9.3 புள்ளிகளுடன் முதலிடத்தையும், காட்பாதர் திரைப்படம் 9.2 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

அத்தோடு  “சூரரைப் போற்று” ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா, வருகிற ஜுன் 11 ம் தேதி துவங்கி 20-ந் திகதி வரை நடைபெற உள்ளது.

கொரோனா பரவல் காலம் என்பதால், ஷாங்காய் திரைப்பட விழா இந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட உள்ளது.

Hot Topics

Related Articles