சீனாவின் முதலாவது ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை அடைந்தது!

செவ்வாய்கிரகம் தொடர்பான ஆராய்ச்சிக்கா ஏவப்பட்ட சீனாவின் ( Zhurong ) ஸீஹூரோங்-1 ரோவர் விண்கலம் கிரகத்தில் மேற்பரப்பை அடைந்தது.

இதையடுத்து சீனா தனது முதல் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்க உள்ளது.

இது நடந்ததும் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெறும்.

ஸீஹூரோங்-1 விண்கலம் வெள்ளிக்கிழமை (மே 14) (2311 GMT) மணிக்கு செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பை அடைந்தது.

எனினும் சீன விண்வெளி அதிகாரிகள் சரியான நேரத்தையும் இருப்பிடத்தையும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 (Tianwen-1) விண்கலன், கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது.

மூன்று மாதங்களுக்கும் மேலாக செவ்வாய் கிரகத்தை சுற்றிய வந்த விண்கலம் ரோவர் இணைக்கப்பட்டு, சுற்றுப்பாதையில் இருந்து பிரிக்கப்பட்டு கிரகத்தின் மேற்பரப்பை நோக்கி செல்லத் தொடங்குகிறது.

லேண்டர் மற்றும் ரோவர் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன்,செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க முயற்சிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இது செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கு இருப்பிடத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் தரையிரங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சீனா தேசிய விண்வெளி நிர்வாகம் (சிஎன்எஸ்ஏ) வெற்றிகரமாக தரையிறங்குவதை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை,
ஆனால் சமூக ஊடகங்களில் அரசு நடத்தும் சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க் (சிஜிடிஎன்) மற்றும் சீனாவின் மக்காவ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நாசா ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருமுறை தரை இறக்கியுள்ளது.

இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும்.
அத்தோடு, செவ்வாய் கோளின் பாறைகளைத் துளையிடுவது மற்றும் அக்கோளில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருந்ததற்கான ஆதாரங்களைத் தேடும்.

 

UPDATE : 

செவ்வாய் கிரகத்தில் விண்கலனை வெற்றிகரமாக தரையிறங்கி சரித்திரம் படைத்துள்ளது சீனா. இந்தத் தகவலை சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் (Chinese President Xi Jinping) வாழ்த்து தெரிவித்தார்.

 

“சவாலை நீங்கள் அனைவரும் தீரத்துடன் எதிர்கொண்டீர்கள். சிறப்பாக செயல்பட்டீர்கள். கிரகங்களை ஆய்வு செய்யும் நாடுகளின் பட்டியலில் நமது நாட்டை சேர்த்துள்ளீர்கள்” “உங்களுடைய மிகச்சிறந்த சாதனை நம் நாட்டு மக்களின் நினைவுகளில் என்றென்றும் பதிந்திருக்கும்” என்று சீன அதிபர் பாராட்டியுள்ளார்.

 

Hot Topics

Related Articles