இந்தியாவின் முதலாவது லெஸ்பியன் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது!

ராம்கோபால் வர்மா, சர்ச்சை குறிய தனது படங்களின் மூலம் இந்தியாவில் அனைத்து திரைப்பட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றார்.

இவர் கிளைமாக்ஸ் மற்றும் நேக்கட் என்ற இரண்டு படங்களை இயக்கி தனது சொந்த சேனலில் அதை வெளியிட்டு வருகின்றார்.

தற்போது ‘டேஞ்சரஸ்‘ என்ற மற்றுமொரு சர்ச்சைக்குரிய படத்தை இயக்கி உள்ளார் இவர்.

அந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

ஆண்களால் ஏமாற்றப்பட்ட இரு பெண்கள் பரஸ்பரமாக அன்பை பகிர்ந்து கொள்ளும் காட்சியமைப்பில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் ஆக்ஷன் திரைப்படமாகும். அதில் நயினா கங்குலியும், அப்ஸராவும் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

1989ஆம் ஆண்டு இவர் இயக்கிய முதல் தெலுங்கு திரைப்படமான ‘சிவா‘ நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வசூலை வாரி குவித்தது.

இவ்வாறு இவர் இயக்கிய சிவா படத்திற்காக பல விருதுகளை பெற்று வெற்றி இயக்குனர் என முத்திரை பதித்தார்.

முதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அளவில் அனைவரும் இவரை உற்று நோக்கினர். பல முன்னணி நடிகர்களும் அடுத்தடுத்து தங்களை இயக்க வாய்ப்பு அளித்தனர்.

இவ்வாறு தெலுங்கிலும் இந்தியிலும் கொடிகட்டி பறந்த ராம்கோபால் வர்மா, தமிழில் சூர்யாவை வைத்து ரத்தசரித்திரம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

மேலும் இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து திருடா திருடா, உயிரே போன்ற பல படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

 

 

Hot Topics

Related Articles