கொரோனாவால் நடிகர் பாண்டு மரணம்! திரைத்துறை பிரபலங்கள் உருக்கம்

 

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை நடிகருமான நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்துளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை பாண்டு சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

காதல்கோட்டை, அழகி, வரலாறு, கில்லி, வில்லு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் நடிகர் பாண்டு.

நடிகர் பாண்டுவின் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Hot Topics

Related Articles