உலகம்

கொரோனா தீவிரம் – மும்பையின் நிலை குறித்து வைத்தியரின் கண்ணீர் ததும்ப பேசும் காணொளி!

இந்தியாவில் தீவிரம் அடைந்து வரும் கொரோனா தொற்று காரணமாக  மும்பையில் நிலவிவரும்  அசாதாரணமான சூழ்நிலை குறித்து தொற்றுநோய் நிபுணரான டாக்டர் கிலாடா கண்ணீர் ததும்ப பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-

நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கிறோம். இதுபோன்ற ஒரு சூழ்நிலையை இதற்கு முன்பு பார்த்தது இல்லை. மக்கள் பீதியடைந்துள்ளனர். நாங்கள் அதிகமான நோயாளிகளை கவனிக்க வேண்டியுள்ளது. படுக்கைகள் இல்லாததால் மோசமான நிலையிலிருக்கும் நோயாளிகள் வீட்டில் சிகிச்சை பெறுகிறார்கள்.

முதலில் நீங்கள் அனைவரும் தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். உங்களுக்கு கொரோனா வரவில்லை என்றாலோ அல்லது கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருந்தாலோ நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ என்று நினைக்க வேண்டாம் அல்லது உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக நினைக்க வேண்டாம். நீங்கள் தவறு செய்கிறீர்கள். பல இளைஞர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்கள். அவர்களுக்கு நாங்கள் உதவ முடியாது.

கொரோனா எல்லா இடங்களிலும் உள்ளது. அதனால் முககவசம் அணியாமல் வெளியே செல்லாதீர்கள். தகுதியுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி கடுமையான பாதிப்பை தடுக்க உதவும் என கூறியுள்ளார்.

இந்திய தலைநகர் மும்பையில்  மருத்துவமனைகளில் தொற்று பாதித்த நோயாளிகளுக்கான படுக்கைகள் 80 சதவீதம் நிரம்பி விட்டன.

தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் வெண்டிலேட்டர் வசதியுள்ள படுக்கைகளில் 98 சதவீதம் நிரம்பி விட்டன. மேலும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பற்றாக்குறையும் நிலவுகிறது.

சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 2 தனியார் மருத்துவமனைகளில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் மராட்டியம் தான். தினசரி பாதிப்பு 55 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. தற்போது 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Hot Topics

Related Articles