தேசிய மட்டத்தில் மிகத் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்க அங்கர் விளையாட்டு அமைச்சுடன் கைகோர்ப்பு  

சர்வதேச மட்டத்தில் போட்டியிடும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வளர்ப்பதற்கு முழுமையான ஊட்டச்சத்து மிகவும் முக்கியமான ஒரு உந்துசக்தியாகும் என்பதை உணர்ந்துள்ள அங்கர், உலக அரங்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அபிலாஷை கொண்ட திறமைமிக்க விளையாட்டு வீரர்களை வளர்ப்பதற்காக விளையாட்டு அமைச்சுடன் கைகோர்த்துள்ளது.

மிகவும் திறமை கொண்ட விளையாட்டு வீரர்களை வளர்ப்பதற்கான நீண்ட கால, முற்போக்கான அணுகுமுறையை இப் பங்குடமை வளப்படுத்துவதுடன், தேசிய விளையாட்டு மன்றத்துடன் இணைந்து விளையாட்டு அமைச்சினால் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக, அனைத்து தரப்பிலிருந்தும் ‘அடுக்கு 1’ இனைச் சேர்ந்த 59 தேசிய விளையாட்டு வீரர்கள் தொழில்முறை அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஒலிம்பிக், பராஒலிம்பிக் விளையாட்டு பொதுநலவாய நாடுகள் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டு உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டும் வகையில் விருத்தி செய்யப்படுவார்கள்.

இந்த விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் முழுமையான நலன் மற்றும் பெறுபேற்றுத்திறனுக்கு உதவுவதற்காக அவர்களின் வளர்ச்சி பயணம் முழுவதும் ஊட்டச்சத்து பொதிகளை வழங்க விளையாட்டு அமைச்சிற்கு அங்கர் உதவும்.

இது தொடர்பான கூட்டு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வில், இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சரான கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் கூறுகையில், “நாட்டிற்குள் பலவிதமான விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதும், பல்வேறுபட்ட வகையிலான திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதும் மிக முக்கியமானது.

இந்த நிகழ்ச்சித்திட்டம் நாட்டின் பல விளையாட்டுக்களையும் மற்றும் பாகங்களையும் அடைவதை உறுதிசெய்வதுடன், ஒவ்வொரு துறையிலும் பெரும் ஆற்றல் கொண்ட விளையாட்டு வீரர்கள் இதன் மூலமாக வலுவூட்டப்படுவார்கள்,” என்று குறிப்பிட்டார்.

“எங்கள் நிகழ்ச்சித்திட்டத்தில் இடம்பெறும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் சிறந்த ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்து, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்க உதவுவதற்காக இன்று எங்களுடன் கைகோர்த்தமைக்கு அங்கர் மற்றும் ஃபொன்டெரா பிரான்ட்ஸ் லங்கா நிறுவனத்திற்கு நான் நன்றி கூறுகிறேன், ” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

ஃபொன்டெரா பிரான்ட்ஸ் லங்கா மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான வித்யா சிவராஜா அவர்கள் கூறுகையில், “இலங்கையில் விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்ய வேண்டியது ஒரு தேசிய தேவைப்பாடாகக் காணப்படும் நிலையில், இதனைப் பொறுப்பேற்று இலங்கை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் ஆரம்பித்துள்ள இந்த முற்போக்கான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியில் அங்கம் வகிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கப்பெற்றமைக்கு நாம் நன்றிக்கடன்பட்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

“எங்கள் தேசத்தின் திறமையான விளையாட்டு வீரர்களை மேம்படுத்துவதற்கும் அவர்களின் தொழில் வளர்ச்சி பயணத்தின் முக்கிய அங்கமான ஊட்டச்சத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இடமளிப்பதற்கும் விளையாட்டு அமைச்சுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் பணிவுடனும், ஆவலுடனும் உள்ளோம். எங்கள் நாடு திறமைசாலிகளால் நிறைந்துள்ளதுடன், மிகவும் திறமை கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உலகளாவிய விளையாட்டுகளில் போட்டியிடவும், நம் தேசத்தில் ஒரு முன்மாதிரியாக ஏனையவர்களை ஊக்குவிக்கவும் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள ஆதரவளிக்க எங்கள் பங்கினை ஆற்றுவதற்கான ஒரு வாய்ப்பாக நாங்கள் இதனை எடுத்துக்கொள்கிறோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

படம்: (மாதிரி அடையாளச் சின்னத்தைக் காண்பித்தல்) – இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான கௌரவ நாமல் ராஜபக்ஷ, ஃபொன்டெரா பிரான்ட்ஸ் லங்கா மற்றும் இந்திய துணைக் கண்டத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான வித்யா சிவராஜா, மற்றும் அடுக்கு 1 இனைச் சேர்ந்த திறமைமிக்க இலங்கை விளையாட்;டு வீரர்கள் இந்த கூட்டாண்மையின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட காட்சி.

Hot Topics

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்தது சீன ராக்கெட்: எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம்

விண்ணில் சீனா செலுத்திய லாங் மார்ச் 5பி ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமியை சுற்றிக்கொண்டு இருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையலாம் என ’ஸ்பேஸ் நியூஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனா விண்வெளி...

US-based Rizing acquires attune Lanka from MAS Holdings

ale in line with MAS Holdings’ long-term strategic objectives MAS Holdings yesterday announced, that in line with its long-term strategic objectives, it has concluded...

Assessing the critical habitats of sharks and rays around Jaffna

By Daniel Fernando – Marine Biologist | Co-Founder of Blue Resources Trust  Sharks and rays (elasmobranchs) are a unique group of fishes with skeletons made...

Related Articles