அமானா வங்கி சிறுவர் கணக்குகளுக்கு வருட இறுதி போனஸ் 2021 ஆம் ஆண்டுக்காக போனஸ் பெறுமதியை ரூ. 10,000 வரை அதிகரித்துள்ளது

மாதாந்த நிலையான கட்டளை ஒன்றினூடாக சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவிப்பதை வரவேற்கும் வகையில், 2020 ஆம் ஆண்டில் கணக்கை சீராக பேணியிருந்தமைக்கு அமைவாக, தகைமை பெற்றிருந்த சிறுவர் சேமிப்புக் கணக்குகளுக்கு அமானா வங்கி வருட இறுதி போனஸ் கொடுப்பனவை வழங்கியுள்ளது.

நிலையான கட்டளை போனஸ் ஊக்குவிப்புத் திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகம் செய்திருந்த நிலையில், தமது பெற்றோரின் அல்லது பாதுகாவலரின் கணக்கிலிருந்து ஆகக்குறைந்தது தொடர்ச்சியான பத்து மாதாந்த நிலையான கட்டளைகளினூடாக கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொண்ட 2000க்கும் அதிகமான சிறுவர் சேமிப்புக் கணக்குதாரர்களுக்கு அவர்களின் நிலையான கட்டளைப் பெறுமதித் தொகைக்கு நிகரான ரூ. 2000 வரையான தொகை போனஸ் கொடுப்பனவாக வழங்கப்பட்டிருந்தது.

சிறுவர் சேமிப்பு போனஸ் கொடுப்பனவுத் திட்டம் தொடர்பில் வங்கியின் வைப்புகள் பிரிவின் தலைமை அதிகாரி அர்ஷாத் ஜமால்தீன் கருத்துத் தெரிவிக்கையில், “பலருக்கு நிதியியல் ரீதியில் பெருமளவு சவால்கள் காணப்பட்ட போதிலும், தமது பிள்ளைகளின் கணக்குக்கான மாதாந்த நிலையான கட்டளைகள் செயலில் இருப்பதை எமது வாடிக்கையாளர்கள் உறுதி செய்திருந்தனர்.

அவ்வாறான பெற்றோருக்கு வருட இறுதி போனஸ் கொடுப்பனவை அவர்களின் பிள்ளைகளுக்காக வழங்கி அவர்களின் முயற்சியை வரவேற்று ஊக்குவிப்பது முக்கியமானது என நாம் கருதுகின்றோம். கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் வெற்றிகரத் தன்மையைத் தொடர்ந்து, பெற்றோர்களை தமது பிள்ளைகளுக்காக சேமிப்பதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், 2021 ஆம் ஆண்டுக்கான நிலையான கட்டளை போனஸ் ஊக்குவிப்புத் திட்டத்துக்கான ஆகக்கூடிய போனஸ் பெறுமதியை 5 மடங்கினால் வங்கி அதிகரித்து ரூ. 10000 ஆக்கியுள்ளது என்பதை அறியத்தருவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன” என்றார்.

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு நிலையான கட்டளையை நிறுவிக் கொள்வதற்கு அல்லது ஏற்கனவே காணப்படும் நிலையான கட்டளைப் பெறுமதியை அதிகரிப்பதற்கு, இலகுவாக வங்கியின் இணைய வலையமைப்பு மூலம் தகவல் அனுப்புவதனூடாக அல்லது bit.ly/AmanaCSO எனும் வலயத்தளத்திலுடாக இணைந்து கொள்ளலாம்.

நிலையான கட்டளை போனஸ் வழங்குவதற்கு மேலதிகமாக, தமது பிள்ளைகளுக்காக ஆரம்ப வயது முதல் சேமிப்புப் பழக்கத்தை பெற்றோர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில் 2 வயதுக்கு குறைந்த பிள்ளைகள் அனைவருக்கும் ஆரம்பிக்கப்படும் புதிய கணக்குக்கு ஏற்கனவே வைப்புச் செய்யப்பட்ட 1000 ரூபாய் மீதியை அமானா வங்கி வழங்குகின்றது.

உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் மக்களுக்கு நட்பான வட்டியில்லாத வங்கியியல் மாதிரிக்கமைய, முழுமையாக இயங்கும் அங்கீகாரம் பெற்ற இலங்கையின் முதலாவதும் ஒரே வங்கியுமாக அமானா வங்கி திகழ்கின்றது. வளர்ச்சியை செயற்படுத்துவது மற்றும் வாழ்க்கைக்கு வளமூட்டுவது எனும் நோக்கங்களுக்கமைய, தனது வளர்ந்து வரும் கிளை வலையமைப்புகள் மற்றும் சுய வங்கிச் சேவை நிலையங்கள் போன்றவற்றினூடாக வாடிக்கையாளர்களை சென்றடைந்து வருவதுடன், பண மீளப் பெறுகைகளுக்காக 5000 க்கும் அதிகமான ATMகள் மற்றும் உடனடி பண வைப்புகளுக்காக 850 க்கும் அதிகமான Pay&Go Kioskகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இணைய மற்றும் மொபைல் வங்கியியல், 24X7 பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் பெண்களுக்காக பிரத்தியேகமான வங்கியியல் அலகுகள் போன்ற சௌகரியங்களையும் வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும்.

Hot Topics

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்தது சீன ராக்கெட்: எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம்

விண்ணில் சீனா செலுத்திய லாங் மார்ச் 5பி ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமியை சுற்றிக்கொண்டு இருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையலாம் என ’ஸ்பேஸ் நியூஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனா விண்வெளி...

US-based Rizing acquires attune Lanka from MAS Holdings

ale in line with MAS Holdings’ long-term strategic objectives MAS Holdings yesterday announced, that in line with its long-term strategic objectives, it has concluded...

Assessing the critical habitats of sharks and rays around Jaffna

By Daniel Fernando – Marine Biologist | Co-Founder of Blue Resources Trust  Sharks and rays (elasmobranchs) are a unique group of fishes with skeletons made...

Related Articles