உலகம்

OPPO Erabadu Wasi மீண்டும்; நம்பமுடியாத தள்ளுபடிகள், ஆச்சரியங்களுடன் புத்தாண்டு சலுகைகள்

ஏப்ரல் 05, 2021, கொழும்பு, இலங்கை: இலங்கையின் மிகவும் பிரபலமான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஸ்மார்ட் அணிகலன்கள் தரக்குறியீடான OPPO, அதன் விசேட புத்தாண்டு சலுகையான “OPPO ERABADU WASI” மூலம் வாடிக்கையாளர்களுக்கு பருவகால உற்சாகத்தை வழங்கி வருகின்றது. இச்சலுகை 2021 ஏப்ரல் 02 – 13 வரை நடைமுறையில் இருக்கும்.

OPPO வின் விசுவாசமிக்க வாடிக்கையாளரும், தமது பழைய OPPO கையடக்கத் தொலைபேசியை வழங்கி, அண்மையில் வெளியிடப்பட்ட F19 Pro இற்கு மாறிக் கொள்ள முடியும் என்பதோடு, இதன்போது ஒவ்வொரு கொள்வனவிற்கும் OPPO Enco W11 இனையும் பெற முடியும் என்பதோடு, F17 கையடக்கத் தொலைபேசியை 50% தள்ளுபடியுடன் பெற முடியும். குறித்த இரு திட்டங்களுக்கும் 6 மாதங்கள் வரை செல்லுபடியாகின்ற இலவச திரை பாதுகாப்பு காப்பீடும் வழங்கப்படுகின்றது.

விசேட புத்தாண்டு சலுகை தொடர்பில் கருத்துத் தெரிவித்த OPPO ஶ்ரீ லங்காவின் பிரதான நிறைவேற்று அதிகாரி பொப் லி தெரிவிக்கையில், “சிங்கள தமிழ் புத்தாண்டானது, உருவாதல் மற்றும் முன்னேறுதல் என்பதன் அடிப்படையாகும்.  இதனைக் கருத்திற் கொண்டே நாம் உற்சாகமான தள்ளுபடிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளோம் என்பதோடு, வாடிக்கையாளர்கள் தங்கள் இரசனைக்கும், பட்ஜெட்டிற்கும் ஏற்றவாறு, F19 Pro அல்லது F17 இற்கு மாறுவதன் மூலம் இந்த ஊக்குவிப்பை அடைய முடியும் என நாம் நம்புகிறோம்.

அண்மையில் வெளியிடப்பட்ட F19 Pro கைடயக்கத் தொலைபேசியானது, இலங்கை சந்தையில் பாரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதன் முதல் நாள் விற்பனையானது, முந்தைய தயாரிப்புகளின் முதல் நாள் விற்பனைகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 200% விற்பனையை காண்பித்தது. இது அக்கையடக்கத் தொலைபேசிக்கான எதிர்பார்ப்பிற்கும் கேள்விக்கும் ஒரு சான்றாகும். இது நேர்த்தி, அதிநவீனம், செயல்பாடு ஆகிய அனைத்து அம்சங்களையும் கொண்டமைந்துள்ளதுடன், அது பிரபல பாடகி உமாரியா சின்ஹவம்சவினால் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.”

பருவகால சலுகைகளின் கீழ் OPPO சேவை வாசி மூலம், அனைத்து பழுதுபார்ப்புகளுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுவதுடன், சாதனங்களுக்கான இதர உபகரணங்களின் கொள்வனவுக்கு ஏப்ரல் 5 முதல் 18 வரை 20% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. சேவை நாளில் அதாவது ஏப்ரல் 10 அன்று, இணையத்தள வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. குறிப்பிட்ட சலுகைக் காலம் முழுவதும், OPPO சேவை மையத்தில் மென்பொருள் புதுப்பிப்புகள் மற்றும் அது தொடர்பான ஒத்த சேவைகள் இலவசமாக வழங்கப்படும்.

இச்சலுகைகளானது, அனைத்து OPPO விற்பனை நிலையங்கள், அபான்ஸ், சின்ஹகிரி, நாடு முழுவதுமுள்ள டயலொக் காட்சியறைகளிலும் கிடைக்கும் என்பதோடு, Buyabans மற்றும் Daraz.lk மூலம் ஒன்லைனிலும் பெற முடியும்.

Hot Topics

Related Articles