உலகம்

உள்நாட்டு பாற்பண்ணைத் துறைக்கு ஆதரவளிக்க சிறிய தொழிற்துறையை உருவாக்கும் Pelwatte Industries

பலதரப்பட்ட சமூகங்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி சமூக மேம்பாட்டை ஏற்படுத்தும்

இலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, உற்பத்திகள், மேய்ச்சல் முறைகள் மற்றும் கால்நடைகளின் பாலுற்பத்தி திறன்களில் பாதிப்பை ஏற்படுத்தும் பருவகாலம், வானிலை மற்றும் காலநிலையையும் மீறி வருடம் முழுவதும் கால்நடைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்யும் புதிய நோக்குடன் தனது பயணத்தை தொடர்கின்றது.

இதன் மூலம் உள்நாட்டு பால் தேவையை பூர்த்தி செய்வதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், உள்ளூர் பாற்பண்ணையாளர்கள், துணை தொழிற்துறைகள் மற்றும் உள்ளூர் மக்களின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்தவும் உறுதிபூண்டுள்ளது.

உள்ளூரில் உள்ள பல பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு இப்போது தங்கள் சொந்த தீவனம் மற்றும் கால்நடை உணவு உற்பத்தி மையங்களை நிறுவுவதற்கு Pelwatte Industries தனது ஆதரவை வழங்கியுள்ளது.

இவற்றை நிறுவனம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட உள்ளூர் பாற்பண்ணையாளர்கள் கொள்வனவு செய்து, ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்குத் தேவையான உணவு கிடைப்பதை உறுதிசெய்வதுடன்,  அதே நேரத்தில் இந்த செயன்முறையில் ஒரு சிறு தொழிற்துறையையும் ஆதரிக்கிறது.

இது தொடர்பில் தனது கருத்தை தெரிவித்த Pelwatte Dairy Industries இன் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க, ” இத்துறையில் முன்னணி உள்ளூர் நிறுவனமாக, எங்கள் பெறுமதி சங்கிலியின் மிக முக்கியமான கூறுகள் விவசாயிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான தொழில்துறைகள் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த காரணத்தினாலேயே Pelwatte Dairy Industries, இந்த ஏழை சமூகங்களின் சமூக-பொருளாதார தரத்தை உயர்த்தும் தீவிர கவனத்துடன், பாலுற்பத்தியாளர்கள் மற்றும் ஆதரவான தொழில்துறைகளின்  வாழ்க்கை மற்றும் பணிகளை மேம்படுத்துவதற்கு  நாங்கள் பெருமளவில் முதலீடு செய்கிறோம்,” என்றார்.

பயிற்சி போன்ற துணை சேவைகளை வழங்குவதன் மூலம், அவர்கள் உயர் தரமான பால் விநியோக சங்கிலியை உருவாக்குவதை PDIL உறுதி செய்கிறது. இது பால் கொள்முதல் பணியாளர்களுக்கு மிக உயர் தரமான புதிய பாலை பெற்றுக்கொள்ள உதவுகிறது. PDIL அதன் தயாரிப்பு வரிசையில் 100% புதிய பாலை மாத்திரமே பயன்படுத்துவதால், இது ஒவ்வொரு தயாரிப்பிலும் மிக உயர்ந்த தரத்தை உறுதிசெய்கிறது.

இன் நிறுவனம் கணிசமான அளவு பாலினை உள்நாட்டிலிருந்து கடும் வழிமுறைகள் மற்றும் முறையான பரிசோதனைகளைப் பின்பற்றி அதன் தரம் மற்றும் சுகாதாரம் சரியாக இருப்பதை உறுதிசெய்து  பெற்றுக்கொள்கின்றது.

இது மாத்திரம் இப்பகுதியைச் சுற்றியுள்ள 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருந்து வருவதுடன், அனைத்து சிறிய அளவிலான பாற்பண்ணையாளர்கள் மற்றும் தனியார் பண்ணைகள் உத்தரவாதமளிக்கப்பட்ட கொள்வனவாளரைக் கொண்டிருப்பதுடன், அவர்களின் உற்பத்திகள் எப்போதும் போட்டித்தன்மையாக விலையிடப்பட்டிருக்கும் என்பதனை உறுதிப்படுத்துகின்றது.

Pelwatte, திறனை வளர்ப்பதில் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளதுடன், முதலீடும் செய்து, கால்நடை ஊட்டச்சத்து தொடர்பான பயிற்சி திட்டங்களை தொடர்ந்து நடத்துகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விவசாயிகளை அழைத்து வந்து பயிற்சியளிக்கின்றது.

நன்கு பயிற்சியளிக்கப்பட்ட பண்ணை நிபுணர்கள் விவசாயிகளுக்கு அவர்களின் விஸ்தீரனமான புல் நிலங்களில் வளர்ந்த தீவனத்தைப் பயன்படுத்தி ஊட்டச்சத்து சேர்க்கையுடன் பல்வேறு ஊட்டங்களின் நடைமுறை பாவனை தொடர்பில் விளக்கமளிக்கின்றனர்.

அதிக பால் தரும் கறவை பசுக்களுக்கு அதிக பால் உற்பத்திக்கு ஊட்டச்சத்து தேவைகளை வழங்கும் உணவு தேவைப்படுகிறது. மாச்சத்துக்கள், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள், விட்டமின்கள் மற்றும் நீர் ஆகிய அனைத்தும் பாலூட்டும் பசுக்களுக்கு பால் மற்றும் பால் கூறுகளை உற்பத்தி செய்வதற்கு பாற் சுரப்பியின் தேவையை பூர்த்தி செய்ய தேவையான ஊட்டச்சத்துக்களாகும்.

இருப்பினும், அதிக பாலை வழங்கும் பசுவை வளர்ப்பதானது கன்று மற்றும் இளம் பசு மாடுகளின் ஊட்டச்சத்துடன் தொடங்குகிறது.

பாற்பண்ணைத் துறையில் மூலப்பொருளாக பால் உள்ளது. இதற்காக மாத்திரம் ஒதுக்கப்பட வேண்டிய வளங்களே தனியான தொழிற்துறையாகும். கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனமானது வருடத்தின் பல நேரங்களில், குறிப்பாக வறண்ட காலங்களில், மழைபொழிவு குறைவாக உள்ள போது, நிலங்கள் தரிசாகவும் வறண்டதாகவும் இருக்கும வேலையில் பற்றாக்குறையாக காணப்படும்.

பால் உற்பத்தியில் நாட்டின் தன்னிறைவு முதன்மையான பணியாக இருக்கும்போது, ​​Pelwatte Dairy பாற்பண்ணையாளர்கள், அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் குடும்பங்களை எண்ணற்ற வழிகளில் ஆதரிப்பதுடன், அவர்களை வலுவூட்டி, அவர்களின் வளர்ச்சியையும் தேசத்தின் வளர்ச்சியையும் வழிநடத்துகிறது.

இலங்கையின் 100% உள்ளூர் பாலுற்பத்தியாளரான Pelwatte, அதன் தொடக்கத்திலிருந்தே இந்த தேசத்தை பாலில் தன்னிறைவு பெறச் செய்யும் நோக்குடன் செயற்பட்டு வருவதுடன் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியிலும் சிறப்பு கவனம் செலுத்துகிறது.

பெறுமதி சங்கிலியில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் பெறுமதியை உருவாக்க இது உதவியது.

 

Hot Topics

Related Articles