பிரேஸில் நாட்டில் உள்ள, டபிரா என்ற கிராமத்தில் வசித்துவரும் சோபியா அல்புக், மைலா போபே டி ரெசென்டே என்ற இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்களாக மாறியுள்ளனர்.
பிறப்பில் ஆணாக இருந்த போதிலும் அவர்கள் பெண்களைப் போன்ற குணாதிசயங்களைக் கொண்டிருந்தனர். இதனால் தமது பாடசாலை காலங்களில் பலவித துன்பங்களுக்கு ஆளாகி வந்துள்ளனர்.
இன்நிலையில் தாம் முழுவதுமாக பெண்களாக மாறி, சமூகத்தில் மதிப்புடன் வாழ வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.
பெண்ணாக மாறினால், மேலும் பல தொல்லைகள் வரும் என, அஞ்சி அதை குடும்பத்தார் அதனை விரும்பவில்லை.
எனினும், பாட்டனாரின் ஆதரவு இரட்டையர்களுக்கு ஆறுதல் தந்தது. அவர், தன் சொத்தை விற்பனை செய்து, சுமார் 45 இலட்சம் ரூபாவை அறுவை சிகிச்சைக்காக வழங்கினார்.
டாக்டர் ஜோஸ் கார்லோஸ் மார்டின்ஸ் என்ற மருத்துவர், இந்த இரட்டையர்களுக்கு ஐந்து மணி நேர அறுவை சிகிச்சை செய்து, அவர்களை பெண்களாக மாற்றியிருக்கிறார்.
உலகிலேயே இப்படி இரட்டையர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன் என்கிறார் அவர்.
கடந்த 14 ஆம் திகதி இரட்டையர்கள் முழுமையான பெண்ணாக மாறி விட்டனர்.
இதையடுத்து, அவர்கள் ஒரு காணொளியை வெளியிட்டு, அதில் மருத்துவ மாணவியான மைலா ரெசன்டே, ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி,’என் உடலை நான் எப்போதும் நேசிப்பேன்.
உலகில் முதன் முறையாக ஒரே சமயத்தில், பெண்களாக மாறிய இரட்டையர் என்ற சிறப்பை, 19 வயதான மைலா ரெசன்டே, சோபியா அல்புர்க் பெற்றுள்ளனர்.