கற்பிக்கத் தயாராகவுள்ள மேகண் கணிமை (Cloud Computing)பாடத்திட்டத்தைக் கொண்ட உயர் கல்வி நிறுவனமான யுறுளு அக்கடமியின், அமேசன் வெப் சேர்விஸ் ((AWS) திட்டத்துடன் மற்றுமொரு புதிய முயற்சியில் தனது பங்களிப்புத் தொடர்பில் SLIIT அறிவித்துள்ளது.
அக்கடமியின் பாடநெறியானது தற்போதைய Nசுவைகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட சிறந்த நடைமுறைகள் பிரதிபலிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் AWS பாடவிதான நிபுணர்களால் தயாரிக்கப்பட்டு, பேணப்படுகிறது. இந்தக் கற்கைகள் யுறுளு தொழில்நுட்பத்தில் அங்கீகாரம் பெற்ற கல்வியாளர்களால் AWS அக்கடமியில் கற்பிக்கப்படுகிறது.
வேகமாக வளர்ந்துவரும் மேகண் கணிமையில் தொழிலைத் தொடர்வது மற்றும் AWS சான்றிதழ் அளிக்கப்பட்ட மேகண் கணிமை பயன்படுத்துனர் சான்றிதழைப் பெறுதல் என்ற நோக்கங்களில் மாணவர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கில் பெப்ரவரி இறுதியிலிருந்து யுறுளு அக்கடமி மேகண் கணிமை ஆரம்ப நிகழ்ச்சித்திட்டத்தை SLIIT தொடங்கவுள்ளது.
அறிமுகப் பாடநெறியானது மாணவர்களுக்கு மேகண் கணிமையின் கருத்திட்டம், யுறுளு சேவைகள், பாதுகாப்பு, கட்டமைப்பு, விலைநிர்ணயம் மற்றும் உதவி பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது. இந்தப் பாடநெறி நான்கு மாத காலப்பகுதியைக் கொண்டிருப்பதுடன், இது வகுப்பறையிலான கல்வி, நிகழ்நிலை மற்றும் கலப்புமுறை ஆகிய முறைகளிலான கற்கைகளைக் கொண்டிருக்கும்.
SLIIT இன் அபிவிருத்தி மற்றும் பொறியியல் சேவைகள்பணிப்பாளர் திரு.உதித கமகே தெரிவிக்கையில், “எமது மாணவர்களுக்கு யுறுளு அக்கடமி பாடநெறிகளை கிடைக்கச் செய்வதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.
மேகண் கணிமைத் துறை வளர்ச்சியானது உலகளாவிய ரீதியில் உள்ள நிறுவனங்களில் தரமான வேலைவாய்ப்புக்களை உருவாக்கியிருப்பதுடன், இத்திட்டத்தின் ஊடாக மாணவர்கள் தமது தொழில்நுட்பத் திறனை வளர்த்துக்கொள்வதன் ஊடாக தமது வேலைவாய்ப்புக்களில் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்” என்றார்.
மேகண் கணிமை திறன்களைக் கொண்ட அடுத்த தலைமுறை நிபுணர்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை SLIIT புரிந்துகொள்கிறது.
மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளவும், மேகண் கணிமையில் தொழில் வாய்ப்புகளைத் தொடரவும் இந்தக் கற்கைநெறி ஒரு ஊக்கியாக செயல்படும். இலங்கையில் தொழில்நுட்பம் தலைமையிலான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு சிறந்த கற்பித்தலை வழங்குவதில் முதன்மை நிறுவனம் என்ற அங்கீகாரத்தை SLIIT பெற்றுள்ளது.
SLIIT இன் கணினி பீடத்தின் கணினி விஞ்ஞானம் மற்றும் மென்பொருள் பொறியியல் திணைக்களத்தின் தலைவர் கலாநிதி நுவன் கோதாகொட குறிப்பிடுகையில், “தொழில்துறையில் நன்கு ஏற்றுக்கொள்ளப்படும் பிரதான மேகண் கணினி சான்றிதழைப் பெறுவதற்கான பயிற்சியை AWS அக்கடமி வழங்ககிறது.
இது அடுத்த தலைமுறை மேகண் கணினி துறைசார் நிபுணர்களை உருவாக்குவதற்கு உதவும். மேகண் கணிமை புதிய இயல்பாக இருப்பதால் புதுமைகளை இயக்க உதவும் AWS பயிற்சி பெற்ற நிபுணர்களின் இணைப்பை ஏற்படுத்துவதே எமது இலக்காகும்” என்றார்.
SLIIT இல் வழங்கப்படும் யுறுளு அக்கடமி திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற 077 330 0066 என்ற இலக்கத்தை அழைக்கவும் அல்லது romi.f@sliit.lk என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளவும்.
படவிளக்கம் முதலாவது படம் – AWS அக்கடமி பாடநெறி – தொழில்துறைக்கும் அக்கடமிக்கும் டையிலான இடைவெளிக்குப் பாலமாகவிருக்கும்