நாசா அனுப்பிய ரோவர் ஆய்வு ஊர்தியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்ட இலங்கைப் பெண்!

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய பெர்சிவரன்ஸ் (Perseverance) ரோவர் ஆய்வுஊர்தி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

வெற்றிகரமாகத் தரையில் இறங்கியுள்ள விண்கலம் அதன் முதலாவது ஒளிப் படத்தை சில நிமிடங்களிலேயே பூமிக்கு அனுப்பியது. மண் மாதிரிகளைச் சேகரிக்கின்ற பணியை அது அடுத்த சில மாதங்களில் ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பண்டைய உயிர் வாழ்க்கையின் சுவடுகளை லேஸர் மூலம் ஆய்வு செய்து தரவுகளை அது உடனுக்குடன் பூமிக்கு அனுப்பி வைக்கவுள்ளது.

இந்த விண்கலத்தை வடிவமைக்கும் முக்கிய பணியில் இலங்கையை சேர்ந்த பொறியிலாளர் மெலனி மகாராச்சி பணியாற்றியுள்ளார். Mars 2020 Perseverance என்ற ரோவர் விண்கலத்தின் உள்ளக மின் அமைப்பினை மெலனி மகாராச்சி வடிவமைத்துள்ளார்.

2003ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் மெலனி மகாராச்சி அமெரிக்காவில் குடியேறினார். அங்கு அவர் விண்வெளி பொறியியல் பட்டப்படிப்பை கலிபோர்னியா பல்கலைக்கத்தில் முடித்தார்.

இன்று உலகையே தன்வசம் திரும்பி பார்க்க வைத்துள்ள Tesla நிறுவனத்தின் SpaceX திட்டத்தில் பணிபுரிந்த அவர் பின்னர் போஜிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

2015 ஆம் ஆண்டு நாசாவின் குழுவுக்கு தெரிவாகிய “மெலனி மகாராச்சி, Mars 2020 Perseverance திட்டத்தின் “designed the internal electrical” குழுவில் இடம்பிடித்தார்.

இதேவேளை, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும், ரோவர் விண்கலத்தின் ஆய்வு நடவடிக்கையில் இந்தியாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி, டொக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

கொவெக்ஸ் திட்டத்தின்கீழ் முதலாவது தடுப்பூசி தொகுதி கானாவை சென்றடைந்தது!

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பித்துள்ளது. இதன் முதற்தொகுதியான கொரோனா தடுப்பூசிகள் கானாவின் தலைநகருகர் அக்ராவை சென்றடைந்துள்ளன. இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் ஒக்ஸ்ஃபோர்ட்...

“பெண்ணாக மாறினால் தொல்லைகள் வரும்” அறிவுரையை மீறி பெண்களாக மாறிய இரட்டையர்கள்!

பிரேஸில் நாட்டில் உள்ள, டபிரா என்ற கிராமத்தில் வசித்துவரும் சோபியா அல்புக், மைலா போபே டி ரெசென்டே என்ற இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்களாக மாறியுள்ளனர். பிறப்பில் ஆணாக இருந்த போதிலும் அவர்கள்...

ஒட்டகச்சிவிங்கியை கொன்று அதன் இதையத்தை காதலர் தின பரிசாக வழங்கியுள்ள பெண்ணுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

தென்னாப்பிரிக்காவின் வனப்பகுதியில் வசித்துவந்த ஒட்டகச்சிவிங்கியை பெண் ஒருவர் கொன்று அதன் இதயத்தை கையில் ஏந்தியபடி படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சம்பவம்பெரும் பரபரப்பை கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தை சேர்ந்த வான்...

Related Articles