“காற்றினால் கர்ப்பமானேன்” இந்தோனேசிய பெண் அதிர்ச்சி தகவல்!

காற்றினால் தான் கர்ப்பமானதாக கூறி ஒரு குழந்தையை பிரசவித்துள்ள பெண் குறித்த வினோதமான வழக்கு இந்தோனேசியாவில் பதிவாகியுள்ளது.

25 வயதான சிட்டி ஜைனா என்ற குறித்த பெண், தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த ஒரு மணி நேரத்திற்குல் தனக்கு குழந்தை பிறந்ததாக கூறியுள்ளார்.

தெற்கு இந்தோனேசிய மாகாணமான மேற்கு ஜாவாவில் அமைந்துள்ள சியான்ஜூர் நகரில் கடந்த வாரம் குறித்த பெண் ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் பிற்பகல் தொழுகைக்குப் பிறகு, அறையில் இருந்த போது வீடு முழுவதும் அதிகமான காற்று வீசியதாக கூறியுள்ளார். 15 நிமிடங்களுக்குப் பிறகு, தாம் வயிற்றில் வலியை அனுபவிக்கத் தொடங்கியதாகவும், அது மிக விரைவாக பெரியதாகி வளர ஆரம்பித்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

அதன் பின் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவருக்கு 2.9 கிலோகிராம் நிறையில் குழந்தை பிறந்துள்ளது.

அவரது வினோதமான கர்ப்பம் பற்றிய செய்தி தற்போது வைரலாகிவருகின்றது.
ஒரு பெண் பிரசவத்திற்கு செல்லும் வரை தனது கர்ப்பத்தைப் பற்றி அறியாதிருப்பது ஒரு விசித்திரமான நிகழ்வு என தெரிவிக்கப்பட்டுகின்றது.

இது தொடர்பான வதந்திகளை தடுப்பதற்கு இவ்விவகாரம் குறித்து விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை கன்னிப்பிறப்புக்கள் எனப்படும் virgin births in nature are common என்றும், குறிப்பாக பல்லிகள் மற்றும் சுறா மீன்கள் ஆண் துணை இல்லாமலே குட்டிகளை பிரசவிக்க கூடியவை எனவும் வைத்திய நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இது கருத்தரிப்பு இல்லாத இனப்பெருக்கமாக இருக்கலாம் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Hot Topics

கொவெக்ஸ் திட்டத்தின்கீழ் முதலாவது தடுப்பூசி தொகுதி கானாவை சென்றடைந்தது!

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பித்துள்ளது. இதன் முதற்தொகுதியான கொரோனா தடுப்பூசிகள் கானாவின் தலைநகருகர் அக்ராவை சென்றடைந்துள்ளன. இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் ஒக்ஸ்ஃபோர்ட்...

“பெண்ணாக மாறினால் தொல்லைகள் வரும்” அறிவுரையை மீறி பெண்களாக மாறிய இரட்டையர்கள்!

பிரேஸில் நாட்டில் உள்ள, டபிரா என்ற கிராமத்தில் வசித்துவரும் சோபியா அல்புக், மைலா போபே டி ரெசென்டே என்ற இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்களாக மாறியுள்ளனர். பிறப்பில் ஆணாக இருந்த போதிலும் அவர்கள்...

ஒட்டகச்சிவிங்கியை கொன்று அதன் இதையத்தை காதலர் தின பரிசாக வழங்கியுள்ள பெண்ணுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

தென்னாப்பிரிக்காவின் வனப்பகுதியில் வசித்துவந்த ஒட்டகச்சிவிங்கியை பெண் ஒருவர் கொன்று அதன் இதயத்தை கையில் ஏந்தியபடி படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சம்பவம்பெரும் பரபரப்பை கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தை சேர்ந்த வான்...

Related Articles