வலிமை படம் குறித்த அப்டேட்களை தல ரசிகர்கள் தொடர்ந்தும் பொது வெளிகளிலும் சமூக வலைதளங்களிலும் கேட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தல அஜித் ரசிகர்களுக்கு புத்தி புகட்டும் வகையில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்த போது அவரிடம் ரசிகர்கள் அப்டேட் கேட்டனர். மேலும், கிரிக்கெட் வீரர்களிடம் அப்டேட் கேட்டது. தற்போது இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில் பிரதமர் மோடியிடமே அப்டேட் கேட்டடுள்ளனர் இதனால் கோபம் அடைந்துள்ள நடிகர் அஜித் இந்த அறிக்கையை வெயிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அறிக்கையில் ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.