36 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை தமது வளர்ப்பு நாய் மீது எழுதி வைத்துள்ள பாட்டி!

அமெரிக்காவின் டென்னிசிஸ் பகுதியில் நாஷ்வில்லே பகுதியைச் சேர்ந்தவர் பில் டோர்ரிஸ் என்ற 84 வயதான பெண்மணி, 36 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை தமது வளர்ப்பு நாய் மீது எழுதி வைத்துள்ளார்.

பில் டோர்ரிஸ் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருக்கு நண்பன், சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இருந்தது லுலு எனும் பார்டர் கோலி இன நாய் மட்டுமே.

முதுமையால் வாடிய பில் டோர்ரிஸ், தனது இறுதிக்கால, நெருங்கியதை உணர்ந்ததும் தான் நேசித்த லுலு, தன் காலத்துக்கு பிறகு துன்பப் படக்கூடாது என்பதற்காக 36 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் லுலு மீது உயில் எழுதிவைத்துள்ளார்.

பில் டோர்ரிஸ், கடந்த ஆண்டே இறந்துவிட்டார்.

தான் எழுதிவைத்த உயிலில், “இந்த உயில் லுலுவின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கானது. எனது சொத்து அனைத்தையும் லுலு பெயருக்கே எழுதிவைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

தற்போது, லுலுவைப் பார்த்துக்கொள்ள அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளை லுலுவுக்குத் தேவையானதை பில் டோர்ரிஸின் சொத்துக்கள் மூலம் செய்து வருகிறது.

பில் டோர்ரிஸின் நிலம் மற்றும் பண்ணை வீட்டின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று அறக்கட்டளை மூலம் மதிப்பிடப்பட்டு வருகிறது.

அந்த பணி முடிந்ததும் லுலுவின் பெயரில் உள்ள சொத்து மதிப்பு இன்னும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும், பில் டோர்ரிஸ் எங்கெங்கு முதலீடு செய்துள்ளார் என்றும் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், 36 கோடி ரூபாய்க்கு சொந்தமான நாய் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Hot Topics

கொவெக்ஸ் திட்டத்தின்கீழ் முதலாவது தடுப்பூசி தொகுதி கானாவை சென்றடைந்தது!

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பித்துள்ளது. இதன் முதற்தொகுதியான கொரோனா தடுப்பூசிகள் கானாவின் தலைநகருகர் அக்ராவை சென்றடைந்துள்ளன. இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் ஒக்ஸ்ஃபோர்ட்...

“பெண்ணாக மாறினால் தொல்லைகள் வரும்” அறிவுரையை மீறி பெண்களாக மாறிய இரட்டையர்கள்!

பிரேஸில் நாட்டில் உள்ள, டபிரா என்ற கிராமத்தில் வசித்துவரும் சோபியா அல்புக், மைலா போபே டி ரெசென்டே என்ற இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்களாக மாறியுள்ளனர். பிறப்பில் ஆணாக இருந்த போதிலும் அவர்கள்...

ஒட்டகச்சிவிங்கியை கொன்று அதன் இதையத்தை காதலர் தின பரிசாக வழங்கியுள்ள பெண்ணுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

தென்னாப்பிரிக்காவின் வனப்பகுதியில் வசித்துவந்த ஒட்டகச்சிவிங்கியை பெண் ஒருவர் கொன்று அதன் இதயத்தை கையில் ஏந்தியபடி படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சம்பவம்பெரும் பரபரப்பை கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தை சேர்ந்த வான்...

Related Articles