பிரதமர் முன்வைத்தது யோசனை மட்டுமே! இலங்கையில் தொடரும் கொரோனா மரணங்கள் தொடர்பிலான சர்ச்சை

இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைகளில் ஒன்றாக பார்க்கப்படும் ஜனாசா தகனம் குறித்த சர்ச்சை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

நேற்று முன் தினம் அந்நாட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொவிட்-19 காரணமாக மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பபோம் என பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கு சர்வதேச தலைவர்களும் தமது ஆதரவை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த விடயத்தில் தீர்மானங்களை எடுக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவிடமே இருப்பதாகவும், பிரதமர் தெரிவித்த யோசனை, குறித்த நிபுணர்கள் குழுவிற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயெ தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கையின் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே நேற்று தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 நோயால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதா? இல்லையா? என்பதை, சுகாதார அமைச்சின் நிபுணர்கள் குழுவே தீர்மானிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமரின் அறிவிப்பு தொடர்பில் குறித்த விடயத்துக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளேயிடம் விளக்கத்தை வழங்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கோரியதன் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமரின் ஆலோசனைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் மூலம் உரிய வழிமுறைகள் கிடைக்கப்பெற்ற பின்னர், அதற்கமைய செயற்பட முடியும் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 சடலங்களை அடக்கம் செய்வது குறித்து ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ அல்லது ஆளும் கட்சிக்கோ தீர்மானங்களை எடுக்க அதிகாரம் கிடையாது என இலங்கை பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

கொவெக்ஸ் திட்டத்தின்கீழ் முதலாவது தடுப்பூசி தொகுதி கானாவை சென்றடைந்தது!

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பித்துள்ளது. இதன் முதற்தொகுதியான கொரோனா தடுப்பூசிகள் கானாவின் தலைநகருகர் அக்ராவை சென்றடைந்துள்ளன. இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் ஒக்ஸ்ஃபோர்ட்...

“பெண்ணாக மாறினால் தொல்லைகள் வரும்” அறிவுரையை மீறி பெண்களாக மாறிய இரட்டையர்கள்!

பிரேஸில் நாட்டில் உள்ள, டபிரா என்ற கிராமத்தில் வசித்துவரும் சோபியா அல்புக், மைலா போபே டி ரெசென்டே என்ற இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்களாக மாறியுள்ளனர். பிறப்பில் ஆணாக இருந்த போதிலும் அவர்கள்...

ஒட்டகச்சிவிங்கியை கொன்று அதன் இதையத்தை காதலர் தின பரிசாக வழங்கியுள்ள பெண்ணுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

தென்னாப்பிரிக்காவின் வனப்பகுதியில் வசித்துவந்த ஒட்டகச்சிவிங்கியை பெண் ஒருவர் கொன்று அதன் இதயத்தை கையில் ஏந்தியபடி படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சம்பவம்பெரும் பரபரப்பை கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தை சேர்ந்த வான்...

Related Articles