GLX  மற்றும் இலங்கை சுற்றுலா கூட்டணி : சுற்றுலா மறுசீரமைப்புத் திட்ட மானியங்களுக்கான முதல் பத்து வெற்றியாளர்கள் அறிவிப்பு

GLX  மற்றும் இலங்கை சுற்றுலா கூட்டணி (Sri Lanka Tourism Alliance) ஆகியவற்றின் கூட்டாண்மையில் சுற்றுலா மறுசீரமைப்புத் திட்ட மானியங்களுக்கான முதல் பத்து வெற்றியாளர்கள் அறிவிப்பு

சுற்றுலாத்துறையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்காக ‘சுற்றுலா மறுசீரமைப்பு மானிய திட்டம்’ எனும் முயற்சியொன்றை இலங்கை சுற்றுலா கூட்டணியின் கூட்டாண்மையுடன் முன்னெடுப்பது பற்றி Good Life X  2020 டிசம்பரில் அறிவித்திருந்தது.

தற்போதைய உலக நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் சவால்களில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை ஆதரிக்க ஜேர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான சமஷ்டி அமைச்சின் சார்பில் பேர்லினில் உள்ள நோவா பவுன்டேஷன் உடன் GIZ இன் இலங்கை சிறிய நடுத்தர தொழில்துறை அபிவிருத்தித் திட்டம் ஆகியன இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்குக் காணப்படும் சிறந்த வாய்ப்புக்கள் மற்றும் தெரிவுக்கான அளவுமுறைகள் பற்றி அறிவிப்பதற்கு இரு தரப்பும் இணைந்து நிகழ்நிலை அமர்வை நடத்தியிருந்தது.

வர்த்தகத்தின் இதயமாகவிருக்கும் நிலைபேறான தன்மையுடன் இலங்கையில் சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளமை மற்றும் ஆகக் குறைந்தது 2 வருடங்கள் செயற்பட்டுள்ளமை போன்ற விடயங்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் விண்ணப்பங்களைத் தெரிவுசெய்யும்போது உறுதிசெய்யப்பட்டன.

தங்குமிட வசதிகளை வழங்கும், பயண இலக்கு முகாமைத்துவ கம்பனிகள் மற்றும் சுகாதார மற்றும் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட 300ற்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு இம்முயற்சிக்குப் பெரும் வரவேற்புக் கிடைத்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நடுவர் குழுவினால் நடத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையில் நிலைபேறானதன்மை, காண்பிக்கப்பட்ட புத்தாக்கத்தின் அளவு மற்றும் மானியத்துக்காக விண்ணப்பிக்கும்போது குறித்த துறையை முன்னேற்ற சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் என்பன கவனத்தில் எடுக்கப்பட்டு பத்து வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

சுற்றுலா மறுசீரமைப்பு மானியத் திட்ட வெற்றியாளர்களை இலங்கை சுற்றுலா கூட்டணியுடன் இணைந்து அறிவிப்பதில் Good Life X மகிழ்ச்சியடைகிறது. வெற்றியாளர்களாகத் தெரிவுசெய்யப்பட்டோர், Plantation Villa (Pvt.) Ltd, The Rascals Kite Resort, Saraii (Pvt.) Ltd, Leopard Trails (Pvt.) Ltd, Surfing Wombats (Pvt.) Ltd, Ahanghama Coliving (Pvt.) Ltd, Nefelibata Travels (Pvt.) Ltd, Handun Villas & Restaurants, Captain Fernando (Pvt.) Ltd and H.S.H Ayurvedic Care (Pvt.) Ltd. ஆகியோர் ஆகும்.

மொத்தமாக €50,000 மானியத்தொகை தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களிடையே தமது புத்தாக்கத்தைப் பொருத்தமான யோசனைகளில் பயன்படுத்துவதற்காக பகிர்ந்தளிக்கப்படும். இது அவர்களின் வணிகங்களை மேலும் எழச்செய்வதற்கும், சுற்றுச்சூழல் மற்றும் உள்நாட்டு சமூகங்கள் அல்லது உள்நாட்டுக் கலாச்சாரத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவும். உலகளாவிய சந்தைகளிலிருந்து கிடைக்கும் புத்தாக்கங்கள் மற்றும் விரிவாக்கங்களை தமது வணிகங்களில் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களையும் வழங்க இத்திட்டம் விரும்புகிறது.

 

Hot Topics

Related Articles