உலகம்

கட்டுநாயக்கவில் உள்ள Ecocycle Pre-Processing வளாகத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

கட்டுநாயக்கவில் உள்ள Ecocycle Pre-Processing வளாகத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள Ecocycle Pre-Processing கட்டடத்தில் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி 03ஆம் திகதி அதிகாலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தலைமைத்துவத்துடன், இலங்கை விமானப்படை, இலங்கை கடற்படை, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தீயணைப்புப் பிரிவு, கொழும்பு தீயணைப்புத் திணைக்களம் ஆகியன வழங்கிய உடனடியான உதவியால் விரைவாகவும், வினைத்திறனான முறையிலும் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இத்தீவிபத்துக்கான காரணம் குறித்த விசாரணை இடம்பெற்று வருகிறது. விசாரணை முடிவடைந்ததும் எமது செயற்பாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கு நாம் மேலதிக நடவடிக்கைகளை எடுப்போம்.

இந்தச் சூழ்நிலையை உடனடியாக முகாமைத்துவம் செய்ய வழங்கிய உதவி மற்றும் ஒத்துழைப்புகளுக்கு முதலீட்டுச் சபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, ஸ்ரீலங்கா பொலிஸ், சட்டவாக்க அமைப்புக்கள், தொழில் அமைச்சின் மாவட்ட தொழிற்சாலை பொறியியல் பிரிவு, மற்றும் கட்டுநாயக்க பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Ecocycle Pre-Processing ஆனது இலங்கையில் உள்ள முன்னணி தொழில்துறை கழிவு முகாமைத்துவ நிறுவனம் என்பதுடன், இலங்கையில் மொத்த கழிவு முகாமைத்துவத் தீர்வை வழங்குவதன் முன்னோடியாகும்.

2003 ஆம் ஆண்டில் ஒரு தொழில்துறை கழிவு முகாமைத்துவத் தீர்வாக Ecocycle Pre-Processing  அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, > INSEE Ecocycle  ஆனது வள மீட்பு, மொத்த சேவைத் தீர்வுகள், பகுப்பாய்வு மற்றும் ஆய்வக சேவைகள், மின்-கழிவு முகாமைத்துவம், தொழில்துறை சுத்தப்படுத்தல் மற்றும் அவசர பதில்வழங்கல் போன்ற தீர்வுகளை வழங்கி வருகிறது.

Hot Topics

Related Articles