உலகம்

எகிப்தில் தங்க நாக்குகளுடன் மம்மிகள் கண்டுபிடிப்பு!

வடக்கு எகிப்தில் அலெக்ஸாண்ட்ரியாவுக்கு அருகிலுள்ள பிரமிட்டில் பணிபுரியும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு மம்மிகளை தங்க நாக்குகளுடன் கண்டுபிடித்துள்ளனர்.

2000 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான இந்த மம்மிகள் மரணத்துக்கு பிறகான வாழ்க்கையில் பேசுவதற்காக தங்க நாக்கு வைக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம், மம்மி மீண்டும் எகிப்திலும் உலகெங்கிலும் சிறப்பு கவனத்தைப் பெற்றுள்ளது.

அப்பகுதியில் உள்ள 16 கல்லறைகளில் அகழ்வாராய்ச்சியின் போது மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

பார்வோனின் இறுதி சடங்குகளின் போது சடலங்களில் தங்க நாக்குகளைப் பயன்படுத்துவது பொதுவானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டுட்டன்காமூன் போன்ற ஆட்சியாளர்களின் உடல்கள் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பண்டைய எகிப்தில் விரல்களையும்  அலங்கரிக்க தங்கத்தைப் பயன்படுத்துவது ஒரு வழக்கம் இருந்துள்ளதாக ஆய்வாழர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Hot Topics

Related Articles