உலகம்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள டுவிட்டர் பதிவு ; சச்சினின் கட்-அவுட்டில் கருப்பு எண்ணெய் ஊற்றிய கேரளா இளைஞர்கள்!

இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள விவசாயிகள் பிரச்சினைக்கு சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் பிரச்னை தொடர்பாக வெளிநாட்டவர் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில், சசின் டெண்டுள்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்து கொள்ள முடியாது. வெளிநாட்டவர்கள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர, பங்கேற்க முடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவைத் தெரியும்.

இந்தியர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். ஒரு தேசமாக இணைந்திருப்போம்” என்று பதிவிட்டிருந்தார்.

தற்போது இந்த பதிவு அவரின் ரகிகர்களையும் அவருக்கு எதிராக செயற்பட காரணமாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இந்திய இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் கேரளாவின் கொச்சியில் சச்சின் டெண்டுல்கரின் கட்-அவுட்டில் கருப்பு எண்ணெய் ஊற்றி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எனினும் ‘சச்சினின் வார்த்தைகள் உண்மையானவை’ என்று அவருக்கு ஆதரவாக சிலர் பதிட்டுள்ளனர்.

Hot Topics

Related Articles