உலகம்

கொழும்பு நகரில் வெற்றிகராமாக முன்னெடுக்கப்படும் “பார்க் என்ட் றைட்” பஸ் சேவை

இலங்கையில், கொழும்பு நகரில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் அந்நாட்டு போக்குவரத்து அமைச்சு “பார்க் என்ட் றைட்” நகர பேருந்து சேவை ஆரம்பித்து நடைமுறைபடு்த்தி வருகின்றது.

இத்திட்டமானது எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொழும்பு மாவட்டம் முழுவதும் விஸ்தரிக்கப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த பேருந்து சேவையானது தற்போது வெற்றிகரமாக இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார்.

செலவை ஈடுசெய்வதற்கு போதுமான வருமானத்தை இலங்கை போக்குவரத்து சபை தற்போது ஈட்டி வருவதாகவும் அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

பயணிகள் காலை மற்றும் மாலை வேளையில் இந்த சேவையினை பயன்படுத்திய போதிலும், மதிய வேளையில் பயன்படுத்துவது குறைந்தளவிலேயே காணப்பட்டது.

அதற்கான காரணிகள் கண்டறியப்பட்டு பயணிகளின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த சேவையினை மேலும் மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுவேளை, நீர் கொழும்பு, கண்டி , 120 வீதி மற்றும் காலி வீதியில் இந்த சேவையினை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles