இந்திய பிரபலங்களில் மதிப்புமிக்கவர்களின் பட்டியலில் விராட் கோலிக்கு முதலிடம்!

2020ஆம் ஆண்டுக்கான இந்திய பிரபலங்களில் மதிப்புமிக்கவர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.

விளம்பர வருமானம் மூலம் விராட் கோலி ரூ.1737 கோடி வருமானம் ஈட்டியுள்ள நலையில் அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

பாலிவுட் பிரபலங்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி தொடர்ந்து 4-வது ஆண்டாக அவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அக்‌ஷய் குமார் விளம்பரங்கள் மூலம் ரூ.860 கோடி சம்பாதித்து 2-வது இடத்தில் உள்ளார். ரன்வீர் சிங் ரூ.740 கோடியுடனும், ஷாருக்கான் ரூ.371 கோடியுடனும், தீபிகா படுகோனே ரூ.364 கோடியுடனும் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

இதேவேளை, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய அணி முன்னாள் கேப்டன் டோனி விளம்பரங்கள் மூலம் ரூ.262 கோடி சம்பாதித்துள்ளார்.

அத்துடன் அமீர்கான், ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா ஆகியோரை விட டோனி முன்னிலையில் உள்ளார்.

Hot Topics

Related Articles